பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 & நினைவுக் குமிழிகள்-3 குந்தியின் திருமாளிகைக்குவந்த கண்ணன் அவளுடைய ஆதிவரலாற்றைச் சுட்டி, கன்னன் அவளுடைய மகன் என்பதை விளக்குகின்றான். கன்னனைப் பாண்டவர்கள் பக்கம் கூட்டுவிக்க வேண்டுமாறும், அவன் மறுத்தால், காண்டவவன தகனத்தின்போது தப்பிப்போன தக்கன் மகனாகிய அசுவசேனன் கன்னனிடம் அரவக்கணையாக இருப்பதை எடுத்துக் காட்டி, கன்னனும் பார்த்தனும் ஒருவரோடு ஒருவர் மலையும் போது மறுகணைதொடுக்கா வண்ணம் ஒரு வரமும், ஏனைய நால்வரைக்கொல்லா வண்ணம் மற்றொரு வரமும் பெற்று வருமாறு ஏவு கின்றான். குருநாடன் திருத்தேவிக்கு இப்போது 35(510&#15 th (Dilemma) நேரிடுகின்றது. அரவக் கணையை மறுமுறை தொடுக்காது விலக்கினால் புரவித்தேரோன் மகன் படும்; அப்படிச் செய்யாமல் இருந்தால் மகவான் மைந்தன் களத்தில் மடியும் என்று கருதி இரங்கி வீழ்கின்றாள். கண்ணன் ஓர் அரசியல் ஞானி அல்லவா? கூறுகின்றான். - - 'பைவரும் தலைகள் ஐந்து படைத்தபன் னகமே போல ஐவரும் படுதல் நன்றோ? அங்கர்கோன் படுதல் நன்றோ?" இதை நன்றாக யோசி. ஐவரில் ஒருவர் ஆவிபோனாலும் -ஏனைய நால்வர் உய்யார்' என்று எடுத்துக் காட்டி 'நைவரும் துயரம் மாறி நடப்பதே நன்மை’ என்று அவள் செயற்படவேண்டிய முறையையும் கூறுகின்றான். இவ்வாறு கூறி விதுரன் திருமாளிகைக்குத் திரும்பு கின்றான் மாயோன். - கண்ணன் துரது வந்த சமயத்தில் 855 காரியங்களை முடிக்கின்றான். அவன் எல்லாம் அறிந்தவன் ஆதலால் போர் அவசியம் நடைபெறத்தான் போகின்றது என்பதை விெ. பா. கிருட் தாது- கச்