பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேயும் தாயும் சந்திப்பு 289 " யும் அறிகின்றான். பாண்டவர்களின் வெற்றிக்கான செயல்களை நிறைவேற்றத் தொடங்குகின்றான். I . "ஈ இருக்கும் இடம் எனினும் இப்புவியியல் யான் அவர்க்கு அரசு இனிக்கொடேன்' என்று துரியோதனன் கூறவே போர் உறுதியாகின்றது: "வெஞ்சமர் விளைக்கவே கைவழங்குக' என்று கேட்டு விடுகின்றான். கண்ணனை விருந்தினனாக ஏற்ததைக் கடிந்து துரியோதனன் பேசவே, சொல் இரண்டு புகலேன்; இனி சமரில் நின்று வெங்கண தொடேன்’ என்று தன் வில்லை முறித்து வீடு திரும்புகின்றான் எண்இலாத தவம் இயற்றிய விதுரன். இந்திரனை ஏவி கன்னனிடமிருந்து கவச குண்டலங்களைப் பெறச்செய்து விடுகின்றான். அசுவத்தாமனை சேனாதிபதி ஆக மறுக்குமாறு: கேட்டு, வேறோர் விரகினால் துரியோதனன் இவனை ஐயுறுமாறும் செய்து விடுகின்றான். குந்தியை ஏவி இரண்டு வரங்கள் பெறச் செய்து விடுகின்றான். குந்திதேவி கன்னனின் திருமாளிகைக்கு எழுந்தருள் கின்றாள். கன்னன் அவளை அன்புடன் வரவேற்று முறை மையால் ஆசனத்து இருத்தி அன்னை வந்தது என் அருந் தவப் பயன்!” என்று கூறி, என்னை வந்தவாறு?’ என்று வினவ, அவளும், 'ஈன்ற தாய் யான் உனக்கு' என்றுகூறி அவளுக்குத் தன் ஆதி வரலாற்றை விரித்துரைக்கின்றாள். எனினும், அவளுடைய மொழியைத் தேறாமல், இது. 7. 8. வி.பா : கிருட். தாது- 12 டிெ - டிெ .سسد- f t 8