பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 நினைவுக் குமிழிகள்-3 மாயனார் விரகு’ என மதித்து ஒரு துகிலைத் தந்து உடுத்துமாறு செய்து தேறுகின்றான். தன் தாய் யார் எனத் தவிக்கும் கன்னனிடம் எத்தனையோ பெண்டிர் வந்து தாம் அவன் தாய்’ என்று கூறி அத்துகிலை உடுத்த தனால் அவர்களை என்புருவாகச் செய்த துகில் இது. குந்திதேவி உண்மைத் தாய் ஆதலால் அதனை உடுத்து மாற்றம் அடையாமல்இருக்கின்றாள். கன்னனை மார்புறத் தழுவி அவன் உச்சி மோக்கின்றாள். தான் அவனை வளர்க்கும் பேறு பெறாததற்கு வருந்துகின்றாள். பின்னர், இளைஞர் ஐவருடன் வந்து நீயேஅரசாள வேண்டும் என்ற குந்தியின் வேண்டுகோளைக் கவிஞர்: வருகஎன் மதலாய்: இளைஞர்ஜ வரும்நின் மலர்அடி அன்பினால் வணங்கி உரிமையால் மனம்ஒத்து ஏவலே புரிய ஒருதனிச் செய்யகோல் ஒச்சி அரசெலாம் வந்து உன் கடைத்தலை வணங்க ஆண்மையும் செல்வமும் விளங்கி குருகுலா திபர்க்கும் குரிசிலாய் வாழ்வு கூர்வதே கடன்" எனக் குறித்தாள்? என்று காட்டுவர். இதற்குக் கன்னன் தந்த மறுமொழி யையும், - பெற்ற நீர் மகவு இலாமையோ? அன்றி பெரும்பழி நாணியோ? விடுத்தீர்; அற்றைநாள் தொடங்கி என்னை இன்று அளவும் ஆர்உயிர்த் துனைஎனக் கருதி கொற்றமா மகுடம் புனைந்துஅரசு அளித்து கூடஉண்டு உரிய தம்பியரும் - - 9. வி. பா. கிருட், தூது-258