பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேயும் தாயும் சந்திப்பு - 271 சுற்றம்ஆ னவரும் என்அடி வணங்க தோற்றமும் ஏற்றமும் அளித்தான்' மடந்தை பொன்திரு மேகலை மணிஉகவே மாசுஅறத் திகழும்ஏ காந்த இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப எடுக்கவோ? கோக்கவோ?’ என்றான்; திடம்படுத் திடுவேல் இராசரா சனுக்குச் செருமுனைச் சென்று,செஞ் சோற்றுக் கடன்கழிப் பதுவே எனக்குஇனிப் புகழும் கருமமும் தருமமும்!’ என்றான்." என்று காட்டுவர். இந்தப் பாடல்கட்கு ராய. சொ உருக்க மாக அவருக்கே உரிய முறையில் விளக்கம் தரும்போது கூடியிருப்போரின் கண்கள் குளமாவதையும், சிலரது கண் களில் நீர்தாரை தாரையாக வடிவதையும், வடியும் கண்ணோடு நானும் கண்டு மகிழ்ந்திருக்கின்றேன். மடந்தைபொன்’ என்ற பாடலில் வரும் செய்தி: துரியோதனனும் கன்னனும் இணைபிரியாத நண்பர்கள். துரியோதனனின் அந்தப்புரம் வரையிலும் சென்று பழகும் உரிமை பெற்றிருந்தான் கன்னன். ஒருசமயம் துரியோதனன் இல்லாதபோது அவனுடைய அந்தப்புரம் சென்றான் துரியோதனனின் மனைவியுடன்சொக்கட்டான் ஆடிக்கொண்டு இருக்கின்றான். இந்தச்சமயத்தில் வெளியில் சென்றிருந்த துரியோதனன் வரவே, அதனைக் கண்ட அவன் மனைவி எழுந்து ஒடுகின்றாள். ஆனால், கன்னன் அவனைக் காணவில்லை. ஆதலால் ஒடினவளின் சேலை யைப் பற்றி இழுக்க, அவளது மேகலையின் மணிகள் கயிறு அறுந்து தரையில் சிதறுகின்றன. இதனைக் கண்ட துரியோதனன் கன்னனிடம் இவற்றை எடுக்கவோ? 10. ைெடி டிெ –251 11. டிெ டிெ-252