பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-141 34. நோயால் தாக்குண்டது 1955-se இல் என நினைக்கின்றேன். எனக்குச் சிறிது சிறிதாகப் பசி குறைந்து கொண்டே வந்தது. ஒர் இட்டலிசுட செரிமானம் ஆகாத நிலைக்கு வந்தது; பால்: போன்வைட்டா, ஹார்லிக்ஸ், வலிமை தரும் மருந்துஇவற்றைக் கொண்டே ஆறு திங்கள் கழிந்தன. இந்த நிலையில்தான் செட்டிகுளம் (பெரம்பலூருக்கு அருகி லுள்ளது)முருகனுக்குப் பிரார்த்தனைசெலுத்துவதற்காகச் சென்று வந்தேன், இதை ஒரு குமிழியில் விளக்குவேன். கல்லூரித் தலைமை எழுத்தர்-திருபழ. நாச்சியப்பன் -ąguļsir sritį įstgyarsar:#@aầr (Oriental Insurance Company) ஏஜண்டாகவும் பணிபுரிந்து வந்தார். இச் சமயம் நானே அவரிடம் சென்று ரூ 2000/-க்கு காப்புறுதி யாளராகச் சேர்ந்தேன். அதற்கு என் உடல் நிலையைக் குறித்து மருத்துவர் ஒருவர் சான்றிதழ் வழங்க வேண்டும். அந்த நிறுவனத்திற்காகச் சான்றிதழ் வழங்கும் பொறுப் பாளராக இருந்தார் புதுநகர் (New Town) என்ற பகுதி யில் குடியிருந்த டாக்டர் சுப்பிரமணிய அய்யர் என்ற மருத்துவர். பழ. நாச்சியப்பன் அவரிடம் என்னை இட்டுச் சென்றார் . நான் அவரிடம் என் உடல் நிலையை விளக்கி பசி வருவதற்கு மருந்து சொல்லுமாறு கேட்டேன். அவரும் உடலை நன்கு சோதித்து பெரிபெரி என்ற நோயால் பீடிக்கப் பெற்றிருப்பதாகவும், இஃது உயிருக்கு, ஆபத்து இல்லையாயினும், உடலில் தளர்ச்சி இருக்கும் என்றும் கூறினார். மருந்து எழுதித் தருமாறு கேட்டேன். அவர் மருந்து ஒன்றும் தேவை இல்லை என்றும், புழுங்கல்