பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 நினைவுக் குமிழிகள்-3 அரிசித் தவிட்டை உணவுடன் சேர்த்து ஒர் ஆண்டுக்கு உண்டால் உடல் சரிப்பட்டு விடும் என்றும் கூறினார். இந்த நோய் நரம்புபற்றியதாதலால் மெதுவாகத்தான் குணப்படும் என்றும் சொன்னார். புழுங்கல் அரிசித் தவிட்டுக்கு எங்குப் போவது? அத்துடன் நெய் சேர்த்து உண்ண வேண்டும் என்றும் கூறிய தால், செயலாற்ற முடியாத நிலை. கைக்குத்தல் அரிசியும் கிடைக்காது. எங்கும் அரிசி ஆலைகள் இருக்கும் காலத்தில் கைக்குத்தல் அரிசிக்கு எங்குப் போவது? நெல்லைக் கை எந்திரத்தில் சுற்றித் தயாரிக்கப் பெறும் அரிசியைப் பயன் படுத்தி இருக்கலாம். அஃது என் நினைவிற்கு வரவில்லை. சைதையில் ஆசிரியர்ப் பயிற்சிக்கல்லூரி உணவு விடுதியில் (1940-41) சுமார் பத்து மாதக் காலத்தில் இந்த அரிசிச் சோறுதான் வழக்கமாக உண்டேன். திருப்பராய்த்துறை விவேகானந்தர் மாணவர் விடுதியில் இந்த அரிசிதான் பயன்படுத்தப் பெறுகின்றது என்பதும் தெரியும். ஒர் எந்திரத்தை வாங்கி நாமே தயாரித்துக் கொள்ளலாம். இந்தப் போக்கில் என் மனம் செயற்படவில்லை. உறுதி யாக இருந்த உடம்பு பஞ்சு போல்-மெல்லியலார் உடம்பு போல்-ஆகிவிட்டது. மிதிவண்டியில் கல்லூரிக்குப் போவது சிரமப் பட்டது. சில நாட்கள் குதிரை வண்டியிலும் சில: நாட்கள் சிறிது தொலைவு பேருந்திலும், சிறிது தொலைவு நடந்தும் சென்று வரும் நிலை ஏற்பட்டது. என் இல்லத் திற்கும் கல்லூரிக்கும் சுமார் 3 கி.மீ. தொலைவு.இருக்கும். இந்த நிலையில் என் மைத்துனரும் அவருடைய அருமை மாமனாரும் சோதிடர்களைக் கொண்டு என் மனைவிக்குக் குழந்தையே இருக்காது என்றும், எனக்கு 38 வயது தான் ஆயுள் என்றும் சொல்லி வந்தது நினை விற்கு வந்தது. என் மனைவிக்குக் குழந்தை இராது என்று சோதிடர் சொன்ன-இல்லை, சொல்லும்படி செய்த