பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நின்னவுக் குமிழிகள்-3 (இன்னினியே-இப்பொழுதே, இப்பொழுதே, சென் றான்-இறந்தான்; கேள்-சுற்றத்தார்) என்று நிலையாமையை உணர்த்தி விரைந்து அறம் செய்யுமாறு அறிவுரை கூறுவதிலும் இக்கருத்து வேறு வகையாக நிழலிடுவதைக் காணலாம். என்னதான் நூலறிவு மிகுந்தாலும் துண்ணறிவு செய்ற்பட்டாலும் உயிர் மனிதனுக்கு வெல்லம் போன்றது. மானிட சட்டை இருக்கும் வரையிலும் மெய்யுணர்தல் என்ற கருத்து நூறு சதவிகிதம் நம்மிடம் தோன்றி நடை முறைக்கு வராது. சென்னையில் ஒரு கோடீஸ்வரன் (மகப்பேறு இல்லாதவர்) தன் கணக்கப் பிள்ளையுடன் நஞ்சுண்டு இறந்தார் என்றால் அவர் யாக்கை நிலை யாமையை உணர்ந்துதான் உயிரைப் போக்கிக் கொண் டார் என்று சொல்ல முடியாது. ஏதோ ஒருசூழ்நிலையைத் தாங்க முடியாது, திண்ணிய மனம் இல்லாது, தம் வாழ் நாளை முடித்துக் கொண்டனர் என்றுதான் கருத வேண்டும். எத்தனையோ தொழுநோயாளர்கள், கால் விரல்கள் வீழ்ந்த பிறகும் முகம் சகிக்க முடியாத விகார நிலையை அடைந்த பிறகும் இருப்பூர்த்தி பாதையில் வீழ்ந்து மாய்த்துக் கொள்ளாமல் பிச்சை எடுத்துப் பிழைக் கின்றனர் என்றால், அவர்கள் தம் உயிரை வெல்லம்போல் மதிக்கின்றனர் என்று தானே பொருள்? இன்னும் படித்த வர்கள், ஆய்வாளர்கள் இவர்களும் தற்கொலை வழியில் செல்லுவதைச் செய்தித்தாள்கள் வழி அறிகின்றோம். இப்போது கூட, என் எழுபத்து நான்காவது அகவை யில், மரணத்திற்கு அஞ்சவில்லை. ஆனால் நூறு வயது வரை வாழவேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டுதான் உள்ளது. 160 நூல்கட்குமேல் எழுதி இலக்கியத் தொண்டு சமயத் தொண்டு ஆற்றவேண்டும் என்பதுதான் என் * பேராசை’. பாரதியார் கேட்கவில்லையா?