பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோயால் தாக்குண்டது 湾罗剑 எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலனம் இல்லாமல், மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின்மவுன, நிலைவந் திடவே நீ செயல்வேண்டும், கனக்கும் செல்வம், நூறுவயது இவையும் தரநீ கடவாயே’ என்ற பாடலில். இதைப் பின்பற்றியே, பிறிதோர் இடத்தில், மேன்மைப் படுவாய் மனமே! கேள் விண்ணின் இடிமுன் விழுந்தாலும் பான்மை தவறி நடுங்காதே பயத்தால் ஏதும் பயனில்லை; யாமுன் உரைத்தேன் கோடிமுறை, இன்னும் கோடி முறைசொல்வேன், ஆன்மா வான கணபதியின் அருளுண்டு அச்சம் இல்லையே." என்ற பாடலில் துணிவு வந்து விடுகின்றது. யாம் இருக்க பயமேன்? என்று கணபதியின் இளவல் முருகனும் கை கொடுத்துதவத் தயாராக இருக்கின்றான். சுப்பிரமணியம் விடுத்த கரடியால் அவர்தம் முதல் வாக்கு எங்கட்கு ஏற்பட்ட மக்கட்பேற்றால் நீங்கிவிட்டா லும், அவரது இரண்டாம் வாக்கு அன்று திகிலை ஊட்டத் தான் செய்தது. என் அறியாமை அகலவில்லை. இடையில் இறக்கும்படி நேர்ந்தாலும், இறுதிவரை உடலைப்போற்ற வேண்டுமல்லவா? அக்காலத்தில் புதுக்கோட்டையில் இராமச்சந்திரன்பிள்ளை என்பவர் மருத்துவத் துறையில் 4. பா.க தோ.பா.வி.நா. நான்மணி. மாலை-7 5. டிெ.டிெ.டிெ-23.