பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器母2 நினைவுக் குமிழிகள்-3 கழக உயர் நிலைப்பள்ளியில் தமிழாசிரியர்; அடிக்கடிக் கூட்டங்களில் பேசுபவர். இதனாலும் டாக்டர் உறவு நெருக்கமாயிற்று. இருவருமே நாகர் கோவிலைச் சேர்ந்த வர்கள். டாக்டர் காங்கிரஸ்காரர். வலி இல்லாமல் ஊசி போடுபவர்’ என்ற பெயரும் வாங்கியிருந்தார் பொது மக்களிடம். மாலை 7. மணி ஒர் ஊசி போட்டுக் கொண்டு வீடு திரும்பினேன். ஏதோ சிறிதளவு உணவு கொண்டேன்; பால்பருகி நன்றாகத் தூங்கினேன். காலையில் எழுந்ததும் வழக்கத்திற்கு மாறாக பசி தோன்றியது. காலைக் கடன்களையும் நீராட்டத்தையும் முடித்துக்கொண்டு சிற்றுண்டி கொண்டேன். முதல் நாள் ஒர் இட்டலி இறங்காத நிலையிலிருந்தேன். அன்று ஐந்து இட்டவி ருந்த முடிந்தது. பகலுணவின்போதும் பசி இருந்தது. நன்றாக உணவு கொண்டேன். பத்து ஊசிகளும் போட்ட பிறகு உடல் நிலையில் பெரிய மாற்றம் கண்டேன். ஆறு திங்கள் உணவு செல்லாத நிலையிலிருந்து விடுபட்டேன். பஞ்சுபோல் இருந்த உடல் மீண்டும் கெட்டியாயிற்று. இப்போது எண்ணுகின்றேன் மருத்துவனாக நின்று என் மூளையைச் செயற்படச் செய்தவன் அந்தர்யாமியாக என் இதய கமலத்தில் வீற்றிருக்கும் எம்பெருமான் ஏழுமலை யான்’ என்பதாக. சுப்பிரமணியம் சோதிடர்களைச் சொல்ல வைத்த வாக்குகள் இரண்டும் பொய்த்தன. 38 வயதில் விண்ணாடு புகுவேன் என்ற வாக்கு பொய்த்து மேலும் 36 ஆண்டுகள் (1989) வாழ்ந்திருக்கின்றேன். என்னுடைய பிரார்த்த கருமம் (நுகர்வினை) தீரும் அளவும் இவ்வுலகில் வாழ்வேன் என்ற உண்மை இப்போது தெளிவாகின்றது. அதன் அளவு அந்த ஆண்டவனே அறிவான். ஆனால் நம்போலியர் அதனைக் கணக்கிட்டு அறிந்து கொள்ள "இயலாது." -