பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 நினைவுக் குமிழிகள்-3 அழையுங்கள்’’ என்று கூறிவிட்டார். இப்படித்தான் முதலியார் ஒரு சிறு நிகழ்ச்சிக்கும் துணிவு இல்லாமல் துவண்டு போவார். அன்று காலை ஒன்பதரை மணிக்கே கல்லூரிக்கு வந்து விட்டேன். நேராகத் தெ, பொ. மீ. தங்கியிருக்கும் இடம் சென்று அவரை வருமாறு அழைத்தேன்; அவரும் வந்து பேசுவதற்கு இசைந்தார். உடனே சுற்றறிக்கை அனுப்பப் பெற்றது. கூட்டம் பதினொரு மணிக்குத் தொடங்கி 12-39க்கு முடிந்தது. பொதுவாகத் தமிழைப் பற்றிப் பல செய்திகளைப் பேசினார். அப்போது A S தேர்வு விடைத்தாள்களை மதிப்பிடும் பணியை ஏற்றுக் கொண் டிருந்தார் போலும். அதில் ஒரு வினா நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் பற்றி சிறு குறிப்பு எழுதுமாறு கேட்கப் பற்றிருந்தது போலும், அதற்கு விடையளித்த ஒருவர் இரண்டு பக்கங்கள் எழுதியிருந்தாராம். அதில் ஆழ்வார் பெயரையும் குறிப்பிடாமல், பிரபந்தத்தின் பெயரையும் காட்டாமல், அந்நூல் எது பற்றி நுவல்கிறது என்றும் சொல்லாமல் வெறும் சொற்களைக்கொண்டே வாக்கியங்களாக இரண்டு பக்கங்கள் நிரப்பியிருந்தார் என்று குறிப்பீட்டது இன்றும் (அக்டோபர்-1989) என் நினைவில் பசுமையாக உள்ளது. பிற்பகல் இரண்டு மணிக்கு தெ. பொ. மீ. யிடம் உரையாடி வரலாம் என்று விளையாட்டரங்கு அறைக்குச் சென்றிருந்தேன். அப்போது தமிழ் பயிற்றும் முறை” (அக்-1957) என்னும் நூலில் ஒரு படி எடுத்துச் சென்று அவருக்கு அன்பளிப்பாகத் தந்தேன். அது பெரிதானது: தமிழ் பயிற்றும் முறைகளை விரிவாக விளக்குவது. அச் சமயத்தில் கலைக் கல்லூரியிலிருந்து நான்கைந்து தமிழ்ப் பேராசிரியர்களும் வந்திருந்தனர். அவர்களுள் ஒருவர் என் அரிய நண்பர் க.தேசிகன். தேசிகன் என்னிடம் மிகவும்