பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லூரியில் பணி ஏற்றல் 7 மாக இருந்த காடும் புல்டோசர் (Bulldozer) களைக் கொண்டு அசுர வேகத்தில் சமப்படுத்தப் பெற்றுக் குறுக்கும் நெடுக்குமாகச் சாலைகள் அமைக்கப் பெற்றன: நிழல் தரும் மரங்கள் சாலையோரமாக இருபுறமும் வரிசையாகப் பாதுகாப்புடன் வளர்க்கப் பெற்றன. கல்லூரி வளாகத்திற்குள் நுழைவாயிலில் மாதிரி உயர்நிலைப் பள்ளி, பயிற்சிக் கல்லூரி இவற்றிற்கு இடம் ஒதுக்கப் பெற்றுக் கட்டட வேலைகள் தொடங்கின. அசுர வேகத்தில் செட்டிநாட்டரசரால் தொடங்கப் பெற்ற அண்ணாமலைப் பல்கலைக் கழகம்போல் காரைக்குடி யில்- செட்டி நாட்டருகில்-ஒரு பல்கலைக் கழகம் ாடங்கப் பெறல் வண்டும் என் நல்லெண்ணம் தொடங்கப் பெறல் வேண்டு ன்ற நல்லெண்ண என்ற கருத்தைச் சாதாரண மக்களும் பேசிக் கொள்ளத் தொடங்கினர். வள்ளல் அழகப்பர் மட்டிலும் நீண்ட ஆயுளுடனும் உடல் தலத்துடனும் வாழ்ந்திருந்தால் 1985 இல் அரசால் தொடங்கப் பெற்றுள்ள பல்கலைக் கழகம் 1960திலேயே - இருப்பத்தைந்து ஆண்டுகட்கு முன்பே - தொடங்கப்பெற்று, 1985 அப்பல்கலைக் கழகத்தின் வெள்ளிவிழா ஆண்டாகத் திகழ்ந்திருக்கும் என்பதற்கு எள்ளளவும் ஐயம் இல்லை. 1948-இல் கலைக் கல்லுரரி நகராட்சிக் கட்டடமாகிய காந்தி மாளிகையில் தொடங்கப் பெற்றது. கல்லூரி வளாகத்தில் அசுர வேகத்தில் அறிவியல் கட்டடங்கள் கட்டும் வேலை தொடங்கப் பெற்று ஒராண்டுக் காலத்தில் நிறைவு பெற்றன. மானிடவியல் துறைகள் சில ஆண்டுகள் அழகான கீற்றுக் கொட்டகைகளிலேயே நடைபெற்று வந்தன. நான்கு ஆண்டுக்குள் மானிடவியல் துறைகளுக்கான கட்டடம் தயாராகி விட்டது, சில வகுப்பு கள் சில ஆண்டுகள் கீற்றுக் கொட்டகையிலேயே தடை பெற்று வந்தன. 1950 இல் நான் காரைக்குடிக்குச் சென்று பயிற்சிக் கல்லூரியில் பணியேற்றபோது ஆறு அறிவியல்