பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

湾36 நினைவுக் குமிழிகள்-3 விடவேண்டும் ஒராண்டு கழித்து அதை மீளவும் நோக்குதல் வேண்டும்; திருத்தங்கள் தோன்றும். திருத் தங்கள் போட்டு மீண்டும் கட்டி வைத்து விடவேண்டும். அடுத்த ஆண்டு கைப்படியை எடுத்து மீண்டும் படித்துப் பார்த்துத் தோன்றுங் திருத்தங்களைச்செய்தல் வேண்டும்; கட்டி வைத்து விடல் வேண்டும். இப்படியே சில ஆண்டுகள் செய்த பின்னர் நூல் செம்மையாக அமையும். பிறகுதான் வெளியிட வேண்டும்.’’ என்பதாக. என் மனத்திற்கு இந்த அறவுரை கவைக்குதவாதது என்று பட்டது. இந்த அறவுரையைக் கைக்கொண்டால் எந்த நூலும் வெளி வர முடியாது: எப்பொழுது பார்த் தாலும் ஏதாவது திருத்தங்கள் தோன்றிக்கொண்டுதான் இருக்கும். காரணம், நாமும் கற்றலால் மேலும் நம் அறிவு வளர்கின்றது. ஆண்டுகள் செல்லச் செல்ல நம் அநுபவமும் மிகுகின்றது. திருத்தங்கள் தோன்றத்தான் செய்யும். இதனால் திருத்தங்கள் நடைபெற்ற வண்ணம் இருக்குமேயன்றி நூல் வெளிவருவதற்கே வாய்ப்பே இராது போய்விடும். இந்த உண்மை ஓர் அசமர்ந்தத் திற்கும் புலப்படாமல் போகாது என்று நினைத்தேன்; அதைச் சொல்லியும் விட்டேன். ஐயா, நீங்கள் சொல்லும் அறவுரையை மேற்கொண்டால் நூல்கள் வெளி வருவதற்கேற்கே வாய்ப்பே இராது. நான் ஆறாண்டுகள் பல நூல்களைப் படித்ததாலும், மாணாக்கர்கட்குக் கற்பித்த அநுபவத்தாலும் உருவாகி வெளிவந்தது இந்த நூல். இதில் பெரும்பாலும் ஆங்கிலத்தில் படித்த கருத்துகள் தமிழ் வடிவம் பெற்றன: இடைஇடையே என் அநுபவமும் கலந்து வருகின்றன.' மேல் நாட்டில் கீட்ஸ், ஷெல்லி, வொர்ட்ஸ் வொர்த்த என்ற கவிஞர்கள் இளமையிலும் எழுதி னார்கள். வளரும் நிலையில் படிப்படியாகப் பல நூல் களைழுைதியும் வெளியிட்டனர். அவர்கள் எழுதிய