பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233 நினைவுக் குமிழிகள்-3: 4.30 மணி கலைக் கல்லூரியில் மாணவர் யூனியன் தொடக்க விழா தொடங்கியது. நானும் அதில் பார்வை. யாளராகப் பங்கு கொண்டேன். கூட்டம் முடிந்ததும். மாலை ஆறு மணிக்கு இல்லம் திரும்பினேன். குமிழி-143 36. மீனாட்சி சுந்தரம் 15ான் திருப்பதியில் பணியாற்றியபொழுது ஒரு. சமயம் நெல்லூருக்கு ஓர் அலுவல் நிமித்தம் சென்றிருந்: தேன். அது ஜூன் மாதம். ஆந்திர நண்பர் ஒரு பழ விருந்து அளித்தார். விருந்து சாமானியமானதுதான். இரண்டு வெள்ளித் தட்டுகளில் தட்டுக்கொன்றாக இரண்டு மாங்கனிகளைச் சமையற்காரன் ஒருவன் எங்கள் முன்னிலையில் உள்ள சிறு நாற்காலிகளின் (Tea poys) மீது வைத்தான். நண்பர் பழத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அதைத் தடவிக் கொண்டே நெருடினார். என்னை நோக்கித் தினண்டி’ (தின்னுங்கள்) என்றார். நான் கத்தி ஒன்று வரும் என்று எதிர்பார்த்துக் கொண் டிருந்தேன். அதற்குள் நண்பர் பழத்தின் அடிப் புறத்தி லிருந்து காம்பை நீக்கித் தொளையிட்டுப் பழத்தை. அப்படியே உறிஞ்சிக் குடித்தார். பழ. ரசத்தைப் பருகின விதம் என்னை வியக்க வைத்தது. பின்னர் எங்கள் முன் இருக்கும் பழம் ரஸ் வர்க்கத்தைச் சேர்ந்தது. என்றும், இந்த வகைப் பழத்தை இப்படித்தான் உண்ண வேண்டும் என்றும் விளக்கினார். பின்னர் நானும் அவ்: விதமே பழத்தை நெருடி அதன் சாற்றை அவர் பருகின் முறையிலேயே உறிஞ்சிப் பருகினேன். அற்புதமான 'பழ அநுபவம் பெற்றேன். அப்போது டி.கே.சி. யின்