பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சி சுந்தரம் 2忍登 நினைவுதான் வந்தது. டி.கே.சி. ஒரு பாடலைப் பலமுறை படித்து-இல்லை, பாடி-இறுதியில் மிகக் கம்பீரமாகப் பாடி கேட்போரைப் பாட்டதுபவத்தின் கொடுமுடிக்கு இட்டுச் செல்வதை நினைத்துக் கொண்டேன். மாம்பழச் சாறும் டி.கே.சி. தரும் கவிதை ரசமும் ஒன்றுபோல் இருந்து இன்றும் என்னை மனத்தால் சுவைக்க வைக் கின்றது. கவிதை பயிற்றும் ஆசிரியர்கள் பாடல்களை வாய் விட்டுப் படிக்கும் பழக்கம் உடையவர்களாக இருத்தல் வேண்டும். மனக்கண் என்று ஒன்றிருப்பது போலவே மனக்காதும் (Mind's ear) நம்மிடம் அமைந்து கிடக் கின்றது. சொற்களுக்கு இரண்டு குணங்கள் உண்டு. ஒன்று, ஒலி; மற்றொன்று, பொருள். அச்சிட்ட நூல்களில் காணப்படும் சொற்கள் அரை உயிரோடுதான் உள்ளன. நாம் ஊட்டுகின்ற ஒசையின் மூலம்தான் எஞ்சிய அரை யுயிரும் முற்றுப் பெறுகின்றது. ஆகவே, ஒசையை ஊட்டித் தான் பாடல்களைப் படிக்க வேண்டும். இடத்திற். கேற்றவாறு ஒசையூட்டிப் படித்தால்தான் பாக்களில் அடக்கி வைக்கப் பெற்றுள்ள உணர்ச்சி வெள்ளம் பீறிட்டுக் கொண்டு வெளிவரும். சொற்களின் பொருளுடன் அவற்றின் தொனிப் பொருளும் கட்டவிழ்த்துக்கொண்டு புறப்படும். தொல்காப்பியத் திற்கு உரை கண்ட பேராசிரியர், பா என்பது, சேட் புலத்திலிருந்த காலத்தும் ஒருவன் எழுத்தும் சொல்லும் தெரியாமல் பாடம் ஒதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுள் என்று உணர்தற் கேதுவாகிப் பரந்து பட்டுச் சொல்வதோர் ஓசை' என்று குறிப்பிடுவர். இதனால் பா என்பது இசை மயமாக இருப்பதொன்று என்பது பெறப்படுகின்ற தன்றோ? 1. *Words are but half alive when they appear on printed pages”—Prof. Garrod. தி-19