பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சி சுந்தரம் “露$夏 பழம்பிழந்த கொழுஞ்சாறும் தேறலும்வாய் மடுப்போம்; பசுந்தழையும் மரவுரியும்; இசைந்திடவே உடுப்போம்; செழுந்தினையும் நறுந்தேனும் - விருந்தருந்தக் கொடுப்போம்: சினவேங்கைப் புலித்தோலின் பாயலின்கண் படுப்போம் எழுந்து கயற் கனிகாவில் விழுந்துவினை கெடுப்போம்; எங்கள்குறக் குடிக்கடுத்த இயம்பிதுகாண் அம்மே. பாடக் குறிப்பில் ஆசிரியர் கருத்துணர்ந்து கவிதை இன்பத்தை நுகருமாறு செய்தல் என்பதைப் பாட நோக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். மாணக்கர்களைப் பாடத்தின்மீது ஊக்குவிக்க வேண்டும் என்பது பயிற்சிக் கல்லூரியில் சொல்லப் பெற்ற விதி. இதனை ஆசிரியர்கள் பல்வேறு வகையில் கையாள லாம். இஃது அவர்தம் யுக்திக்கும் சிந்தனைக்கும் ஏற்ற வாறு அமையலாம். பாடினவரின் வரலாறு கூறுதல் ஊக்கு வித்தல் ஆகாது' என்பது மற்றொரு விதி. இதைச் சொல்லுதல் தேர்வில் கேட்கப்படும் வினாவுக்கு விடை தருதல் போல் அமைவதேயன்றி ஊக்குவித்தல் ஆகாது. மீனாட்சி சுந்தரம் கையாண்ட முறை இது. குறத்தி ஒருத்தி மதுரை மீனாட்சி அம்மைக்குக் குறி சொல்லுவ தாகக் கற்பனை செய்து குமரகுருபரர் பாடியது மீனாட்சி அம்மை குறம்’ என்னும் பிரபந்தம்' என்று நூலைப் பற்றிச் சுருக்கமாகக் கூறினார். அடுத்து பாடலைப் புரிந்து கொள்வதற்கு முன்னுரையாகப் பாடலின் பின்னணியைக் கூறினார். பாட்டுடைத் தலைவி மீனாட்சி அம்மை