பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔諡器 நினைவுக் குமிழிகள்: சொக்கலிங்கப் பெருமான் மீது காதல் கொள்ளுகின்றாள், கருத்திழக்கின்றாள்; தோள் மெலிகின்றது; வளை நெகிழ் கின்றது; மெய் பசக்கின்றது; முகமும் வாடுகின்றது. கருத்தில் நின்ற காதலனை அடைவது எப்பொழுது? என எண்ணி எண்ணி ஏங்குகின்றாள். இந்நிலையில் பொதிய மலையில் வாழும் குறத்தியொருத்தி மதுரையை நோக்கி: வருகின்றாள். காதல் நோயால் மெலிந்து வாடி அமர்ந்: திருக்கும் மீனாட்சி அம்மையைக் காண்கின்றாள். அம்மை. தன் கரத்தை நீட்ட, குறத்தி குறி சொல்லுகின்றாள். முதலில் தன் குலப்பெருமையைக் கூறுகின்றாள். இது: மீனாட்சி சுந்தரம் கூறிய பாட்டின் பின்னணி. பாடத்தை எப்படி வளர்ப்பது என்பது பயிற்சிக் கல்லூரியில் கற்ற முறையைப் பயன்படுத்தினார். குறத்தி கூறும் குலப்பெருமையை இதோ கேளுங்கள்’ என்று கூறிப் பாடலை இசையோடும் தாளத்தோடும் தெளிவாக ஒன்றிரண்டு முறை பாடினார். மாணாக்கர் சுவைக்கும் அளவு பாடினார்: முதல் தடவை பாடும். போதே பாடலில் அடிதோறும் உள்ள கல்லி , தேறல்’, வாய் மடுத்தல்’, பாயல் கண்படுத்தல்', 'கயற். கண்ணி வினை கெடுத்தல்' என்ற அருஞ்சொற்களையும். சொற்றொடர்களையும் விளக்கினார். இதனால் பாடலை இரண்டாம்முறை மூன்றாம்முறைப் பாடும்போது, குளோப் ஜாமுனை, அல்லது கல்கத்தா ரஸ்குல்லாவை வாயில் இட்டு, பல்வினால் சிறிது மென்று நாவினால் துழாவிச் சுவைப்பது போன்ற ஒரு நிலையை ஏற்படுத்தி னார். மாணாக்கர் முகத்தில் பாட்டின் சுவையை அவர்கள் அநுபவித்தது தெளிவாகப் புலனாயிற்று. அவர்களின் கண்களில் கானும் ஒளி, உதட்டில் கானும் புன்முறுவல், உடம்பு முழுவதும் காணப்படும் கிளர்ச்சி இவற்றால் இவை: தெளிவாகத் தெரிந்தன.