பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2鑿鐵 நினைவுக் குமிழிகள்: மாணாக்கர் கூறும் விடைகளைக் கரும்பலகையில் எழுதி னார்; மாணாக்கர்களையும் தம் குறிப்பேட்டில் எழுதிக் கொள்ளச் செய்தார். இப்பாடலில் உள்ள அருஞ்சொற். களுக்கும் பொருள் எழுதிக் காட்டினார். இறுதியாக, பாடலை ஒருமுறை இசையேற்றிப் பாடி மாணாக்கர் களைக் கவிதைச் சுவையின் கொடு முடிக்குக் கொண்டு செலுத்தினார். முதல்வர் முதலியார் பாடம் நடத்தியது. மிக நன்று’ என்று மீனாட்சி சுந்தரத்தைக் கைகுலுக் கினார். - - - மற்றொரு நாள் சமூக இயலில் ஒரு பாடம் எடுக்க ஏற்பாடு செய்தேன். அதுவும் இதே வகுப்பில்தான். இப்போது சமூக இயல் பேராசியர் திருவேங்கடாச்சாரி யாரையும் முதல்வர் துரைக்கண்ணு முதலியாரையும், திரு. P. W. சிநிவாசனையும் பாடத்தைக் கவனிக்க ஏற்பாடு:செய்தேன். இப்போது எடுத்த பாடம் கிருஷ்ண. தேவராயரின் ஆட்சி என்பது. சமூக இயல் பாட ஆசிரியமாணாக்கர்களும் இங்கு வந்திருந்தனர். இந்தப் பாடத்தை யும் அற்புதமாக நடத்தினார். மாணாக்கர்களை மானசீக மாகக் கிருட்டிண தேவராயர் காலத்துக்கே கொண்டு சென்று விட்டார். அவர் கொலுமண்டபத்தில் நவமணிகள் போல் ஒன்பது அமைச்சர்கள் வீற்றிருந்த காட்சி, அவர் ஆட்சியில் நடை பெற்ற நற்செயல்கள் முதலியவற்றை: அற்புதமாகக் காட்டி அனைவரையும் மெய் மறக்கச் செய்தார். முதல்வரும் பேராசிரியப் பெருமக்களும் மீனாட்சி சுந்தரத்தின் திறமையைப் போற்றிக் கை: குலுக்கினர். எல்லோருமே செய்முறைத் தேர்வில் இவருக்கு முதல் வகுப்பு கிடைக்கும் என்று மதிப்பிட்டனர். அடுத்து, அரையாண்டுத் தேர்வு (எழுத்து முறை) நடைபெற்றுக் கொண்டிருந்தது. நான் தேர்வு மண்ட பத்தின் மேற்பார்வையாளராக இருக்கும் வாய்ப்பு கிடைத்த்து சுற்றி வருங்கால் ப்லகுன்ட்ய எழுத்துக்'