பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:மீன்ாட்சி சுந்தரக் 芝等器 களைப் பார்த்தேன். மீனாட்சி சுந்தரம் அருகிலும் நின்று. கொண்டு சில நிமிட நேரம் அவர் எழுதும் விடையை நோக்கினேன். எழுத்து மணிமணியாக முத்துக்கோத்தாற். போல இருந்தது. நடையே ஆங்கிலப் பேராசிரியர்களின் நடையையும் தோற்கடிக்கும் முறையில் இருந்தது. தேர்வு மண்டபத்தில் விரைவாக எழுதும் போதே மூன்று மணி நேர இறுதிவரையும் எழுதிய விடைகள் அற்புதமாக அமைந்திருந்தன. முதல்வர் முதலியாரையும் திரு வேங்கடாச்சாரியாரையும் இவருடைய ஐந்து விடை ஏடு களையும் ஒருமுறை நோக்கிய பிறகு மதிப்பீடு செய்பவர் கட்கு அனுப்பலாம் என்றேன். அவர்கள் அவற்றை மேலோட்டமாகவே நோக்கி வியந்து போயினர். இவருக்கு எழுத்துத் தேர்விலும் முதல் வகுப்பு கிடைப்பது, உறுதி என்பதாக அறுதியிட்டனர். இறையருளால் இவருக்கு எழுத்துத் தேர்விலும் செய் முறைத் தேர்விலும் முதல் வகுப்புகள் கிடைத்தன. காரைக்குடியில் நான் பணியாற்றிய பத்தாண்டுக் காலத் திலும் இவர் ஒருவரே (பல்கலைக்கழகத்திலேயே) இரண்டி லும் முதல்வகுப்பில் தேறியவராகக் காணப்பட்டார். எழுத்துத்தேர்வில் அக்காலத்தில் முதல் வகுப்பில் தேறின. வர் இவர் ஒருவரே என்பது என் நினைவு. இவர் அருப்புக் கோட்டையில் தேவாங்கர் உயர் நிலைப் பள்ளியில் போய்ச் சேர்ந்தார். ஒரு முறை விரிவுப் பணித்துறை ஆதரவில் நான், திருவேங்கடாச்சாரி, முதல்வர் அருப்புக் கோட்டை உயர் நிலைப் பள்ளிக்குச் சென்றிருந்தபோது இவரைச் சந்தித்து மகிழ்ந்தோம். . இவர் நிட்டைப் பயிற்சியுடையவர் என்று முன்னரே குறிப்பிட்டேன். அருப்புக் கோட்டையில் இது மிகவும் தீவிரமடைந்தது போலும். 1966 முடிய என் குடும்பம் காரைக்குடியிலேயே இருந்து வந்தமையால் விடுமுறைக் காலங்களில் காரைக் குடியிலிருப்பேன். அப்போதெல்லாம்