பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

諡姆翰 நினைவுக் குமிழிகள்-3 இவரைப்பற்றி விசாரிக்கத்தவறேன்; ஏழெட்டாண்டுகள் இவர் அருப்புக் கோட்டையில் பணியாற்றினார் என்று கேள்விப்பட்டேன். இறுதிக் காலத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊர்ப்பெருமக்கள் இவரைப் பைத்தியம்’ என்றே அறுதியிட்டனராம். இவரும் ஒரிரு திங்கள் நோய்வாய்ப்பட்டிருந்து இறைவன் திருவடி நிழலை அடைந்தார் என்று கேள்வியுற்று வருந்தினேன். ஆனால் ஒருபாவமும் அறியாத இவர் ஆன்மா வீட்டுலகில் இன்ப மாக இருக்கும் என்பது என் கணிப்பு. குமிழி-144 37. ஆண்டு விழாக்கள் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றிய பத்தாண்டுக் காலத்தில் பல ஆண்டு விழாக்கள் நடைபெற்றன. மிகச் சிறப்பாக நடைபெற்றன. நான் அதிகமாகப் பங்கு எடுத்துக் கொண்ட விழாவை மட்டிலும் நினைவுகூர்கின்றேன். பேராசிரியர் எஸ். சீநிவாசன் முதல்வராகப் பணியாற்றிய காலம் (1952-54). பேராசிரியர் பணியாற்றிய முதலாண்டே ஆண்டு விழா நடத்துவது பற்றிய பேராசிரி யர்கள் கூட்டம் (Staff Meeting) நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக யாரை அழைப்பது என்ற வினா எழுந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொருவர் பெயரைக் குறிப்பிட்டனர். அவர்கள் யாவரும் பேரும் புகழும் பெற்ற பேரறிஞர்கள்தாம். கல்வியைப் பற்றிய உயர்கருத்துகளைக் கொண்டவர்கள். அடியேன் தவத்திரு. சித்பவாநந்த அடிகளின் பெயரைக் குறிப்பிட்டேன். அவர் அனைத்துச் செயல்களிலும் என் வீர வழிபாட்டுக்குரியவராக இருந்த