பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

敦 ண்டு வி ழாக்கள் - 2&7 போதிலும், கல்வி கற்பிப்பது பற்றி எல்லோர் கொண்டுள்ள உயர் கருத்துகளையும், ஆசிரியர்கள் எப்படியிருக்க வேண்டும்? எத்தகைய மாணவர்கள் அவர் தளால் உருவாக்கப் பெறல் வேண்டும்? ஆசிரியர்கள் சில குறிக்கோள் நிலைகளை (ideal Level) தம் மனத்தில் கொண்டு பணியாற்றினால் நல்ல மாணாக்கர்களை உருவாக்கலாம் என்பன போன்ற சிறப்பான கருத்துகளை உடையவர்கள் என்பதை அவர்களுடன் பழகின நாள் முதல் அறிவேனாதலால் அவர் பெயர் குறிப்பிடுவதற்குக் காரணமாக இருந்தது. எல்லாப் பேராசிரியர்களும் தவத் திரு. அடிகளாரை அழைப்பதை ஒருமனதாக ஒப்புக் கொண்டனர். மார்ச்சுமாதம் முதல், இரண்டாம் வாரங். களில் நடத்தி முடித்துவிட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பெற்றது. திருப்பராய்த்துறை அண்மையிலிருப்பதால் கடிதம் எழுதி இசைவு பெறுவதைவிட நேரிலேயே அவரைப் பார்த்துப் பேசி நாள்பற்றிய முடிவையும் அவர்தம் இசைவையும் பெறலாம் என்றும், இதற்கு என்னையே அனுப்பி இவற்றைத் தெரிந்து கொள்ளலாம் என்றும் ஒருமனதாக முடிவு செய்தனர். ஒரு நாள் நான் திருப்பராய்த்துறை சென்று தவத்திரு அடிகளாரைக் கண்டு பேசி அவர் வருகையைப்பற்றி முடிவு செய்தேன்தபோவனத்திலிருந்து தவத்திரு அடிகளாரை அழைத்து வருவதற்கும், திரும்பவும் அவரை தபோவனத்தில் கொண்டு விடுவதற்கும் கார் வசதி செய்யப்பெறும் என்றும் கூறி அவரிடமிருந்து விடைபெற்றுத்திரும்பினேன். அந்தக் காலத்தில் எனக்கு இரு பெரியார்களைக் காண்ட தில், கண்டு உரையாடுவதில் பெருமகிழ்ச்சி இருந்தது. ஒருவர், தவத்திரு அடிகளார். இவரிடம் பழகும் போது கல்வி பற்றிய குறிக்கோளும் ஆன்மிக விருந்தும் கிடைக் கும். 1943 முதல் இவற்றை இந்த முனிவரிடம் பெற்று