பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2莎盘 நினைவுக் குமிழிகள் வந்தேன். மற்றொருவர், மயிலை முனிவர் பன்மொழிப் புலவர் திரு. வே. வேங்கடராஜுலு ரெட்டியார். இவரிடம் பழகும் போது இலக்கணக் குறிப்புகள், இலக்கிய நயங்கள், வைணவம் பற்றிய தத்துவக் கருத்துகள் இவை: எனக்குக் கிடைக்கும். - ஆண்டு விழாக்களில் சில கலை நிகழ்ச்சிகளுக்கும். ஏற்பாடு செய்யப்பெறும். இவற்றைப் பெரும்பாலும் நானும் பேராசிரியர் எஸ். திரு வேங்கடாச்சாரியாருமே கவனித்து வந்தோம். நாடகங்களுக்கு நாங்கள்தான் ஒத்திகை பார்ப்போம். சில சமயம் வேறு பேராசிரியர்களும் வந்து அமர்ந்து கவனிப்பதும் உண்டு. முதல்வர் சீநிவாசனும் அடிக்கடி வந்து பார்த்துப் போவார். சீநிவாசன் இருந்த காலத்தில் பிரதான கட்டடம் தயாராக வில்லை. இடநெருக்கடி இருந்து கொண்டிருந்தது. விழாவன்று நான் தவத்திருஅடிகளாரை அழைத்துவர சிற்றுந்தில் திருப்பராய்த்துறை சென்றேன். பகலுணவு. கொண்டு 12-30 மணிக்குப் புறப்படலாம் என்று சொன்னார்கள். அப்படியே புறப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு. காரைக்குடி வந்து சேர்ந்தோம். அடிகளாரை விளையாட்டு அரங்கத்தி (Stadium)லுள்ள ஒர் அறையில் ஒய்வு எடுக்கச் சொல்லிவிட்டு நான் விழா ஏற்பாடுகளைக் கவனிக்கக் கல்லூரி வந்து விட்டேன். அடிகளார் காட்சி' யரங்கத்திற்கு வந்ததும் முதல்வர், திரு. வேங்கடாச்சாரி, வேறு பேராசிரியர்கள். அடிகளாரைச் சந்தித்து அளவளாவிப் போனார்கள். விழா மாலை ஐந்துமணிக்குத் தொடங்கியது. விழாவில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவற்றை யெல்லாம் இப்போது நினைவுகூர முடியவில்லை : அடிகளார் பேச்சு மட்டிலும் இன்றும் என் மனத்தில் பகண்மியாக-உள்ள்து. 'அடிகளார். அதுமனை எடுத்துக்