ஆண்டு விழாக்கள் 299 காட்டாகக் கொண்டு அவன் மாதிரி அறிவோடும் வீரத் தோடும் திகழவேண்டும் என்று விளங்கினார். பகலவனைத் தொடர்ந்து சென்று அதுமன் கல்விகற்றதைப்போல் நாமும் கற்க வேண்டும் என்றார். அதுமனைப்பற்றி இராமன் இலக்குவனிடம் சொல்லும்போது, ஆற்றலும் நிறைவும் கல்வி அமைதியும் அறிவும் உடையவன் என்று எண்ணுகின்றான். தம்பியிடம், இல்லாத உலகத் தெங்கும் ஈங்குஇவன் இசைகள் கூரக் கல்லர்த கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி சொல்லாலே தோன்றிற் றன்றே யார்கொல்இச் சொல்லின் செல்வன்.' என்று சொல்லுகின்றான். சகலவேத ஆகம சாத்திரங் களையெல்லாம் கரைகண்டவன்; சகலசாத்திரங்களையும் அநந்த வேதங்களையும் கற்றுத் தேர்ந்து புகழ்பெற்ற மகா ஞானி என்னும் தன்மை இவனுடைய பேச்சாலே வெளிப் படுகின்றது. அன்றோ?' என்று கூறி இவனுடைய வாக்கு நயம், நளினம் இவற்றால் சொல்லின் செல்வன்' என்ற விருதையும் நல்குகின்றான். மேலும் கூறும்போது, மானியாம் படிவம் அன்று மற்று.இவன் வடிவம் மைந்த! ஆணிஇவ் வுலகுக் கெல்லாம் என்னலாம் ஆற்றற் கேற்ற சேணுயர் பெருமை தன்னைச் சிக்கறத் தெளிந்தேன்." 1. கம்ப. கிட்கிந்தை-அநுமம்படலம்-20 2. டிை டிெ-21
பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/323
தோற்றம்