பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 99. நினைவுக் குமிழிகள்-3 என்று கூறுவான். இவனைச் சாதாரணமாக பிரமச்சாரி என்று மட்டும் கருதாதே, உருவு கண்டு எள்ளாமை வேண்டும்; உருள் பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து என்றாற்போல, பெரிய தேருக்குச் சக்கரம் கோத்த மாத்திரத்தில் அச்சக்கரம் கழன்று விழாமல், கடையிற் செருகுகின்ற ஆணி வடிவால் சிறிதாயிருந்தே பெரிய பாரங்களையெல்லாம் கொண்டு செலுத்துகின்ற வலிமையுடையதாயிருத்தல் போல் இவனுருவம் வடிவால் சிறிதாக இருந்தே பெரிய செயல்களையெல்லாம் செய்து முடிக்கும் வலிமையுடையது; ஆதலால் இவன் உருவத்தை நோக்கி இகழ்ச்சி செய்யலாகாது; இத்தன்மைத்தான பெருமை, மகிமை, ஆற்றல் என்றால் காலம் வரும்போது வெளிப்படும்’ என்கின்றான், இன்னும் கூறுவான்: ‘'இப்பூவுலகிலுள்ள முனிவர் களுள்ளும், மேலுலகிலுள்ள வானவர்களுள்ளும் இத் தகைய திறமையுடையவர் யார் இருக்கின்றார்கள்? வேதங் களையெல்லாம்.முற்றும் அறிந்த இந்தப்பிரம்மச்சாரியினது மொழிக்கு எதிரில், யாவர்க்கும் முதல்வரான தன்மை யுடையவர்களாகின்ற மும்மூர்த்திக்கேயாயினும் மிக்க வல்லமையுடையது' என்பதாக. கம்பநாடனும் அதுமனை "ஆண்டகை (ஆண் +தகை)' என்கின்றான்; ஆண்மைக் குணமுடையவன் என்பது இதன் பொருள். இத்தகைய அதுமனை நாம் (ஆசிரியர்களும் மாணாக்கர்களும்) குறிக்கோளாகக் கொண்டு அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறும்போது, அருகிலிருந்த திரு. கிருஷ்ணய்யங்கார், ' என்ன ரெட்டியார், நம்மையெல்லாம் குரங்குகளாக்கி விட்டார், சாமியார்?' என்று கிண்டலாகவும் வெறுப் பாகவும் கேட்டார். சாமியார் குரங்குகள் என்று சொல்லி விருந்தால் தான் குரங்குகள் என்று கருத வேண்டும். அவர் அப்படிச் சொல்லவில்லையே. அநுமன்’ என்றுதானே