பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லுரரியில் பணி ஏற்றல் நானும் இந்த விடுதியில் சேர்ந்து கொண்டேன்; திரு. எஸ். திருவேங்கடாச்சாரியும் இதில் சேர்ந்தார் . இருவரும் ஒர் அறையில் தங்கியிருந்தோம். 1950-இல் தமிழ் எம்.ஏ. தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், 1951-இல் எப்படியும் எழுதி முடிக்க வேண்டும் என மன உறுதி கொண்டேன். கல்லூரி வாழ்வு : படிப்பதற்கும் எழுதுவதற்கும் நல்ல சூழ்நிலை . பணியில் அமர்ந்த மறுவாரமே துறையூர் சென்று முக்கிய மான நூல்களில் 6.0, 70 எடுத்துக் கொண்டு வந்தேன் ; இந்த நூல்களை என் அறையில் வரிசையாக இரண்டு மூன்று சிறுமேசைகளை ஒன்று சேர்த்து அவற்றின் மீது இரண்டு மூன்று வரிசைகளாக அடுக்கி வைத்தேன். ஒருநாள் மாலை 7 மணிக்குப் பக்கத்திலுள்ள உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு. K. R. சீநிவாச அய்யர் மாணவர் விடுதிக்கு வந்து சேர்ந்தார். திருவேங்கடாச்சாரி அவருக்கு என்னை அறிமுகம் செய்து வைக்கும்போது இவர்தான் தமிழ்ப் பேராசிரியர் ரெட்டியார் , எங்கள் கல்லூரிக்கு இவரைப் பேராசிரியராக நியமித்துள்ளோம். சிறுவயதிலேயே ஓர் உயர்நிலைப் பள்ளியைத் தொடங்கி அதன் தலைமையாசிரியராக ஒன்பது ஆண்டுகள் உழைத்து அதைச் சிறந்த பள்ளி யாக்கியவர். அருமையாக வளர்த்த அப்பள்ளியை விட்டு இங்கு வந்துள்ளார். இதுவரை உண்மை; இதற்கு மேல்) இவர் தமிழ்க் கடல்; வித்துவான் பட்டம் பெற்றவர். இரண்டு ஆண்டுகட்கு முன்னரே M. A. பட்டம் பெற வேண்டியவர். ஏதோ சில அசந்தர்ப்பங்களால் எழுத முடியாமல் இந்த ஆண்டு எழுத விருக்கின்றார். இவரது நூல்களைப் பாருங்கள். இவை இவர்தம் நூல்களில் பத்தில் ஒரு பங்குதான். இரண்டு மூன்று பீரோக்களில் உள்ள நூல்கள் இன்னும் இரண்டு வாரங்களில் வீட்டுச் சாமான்களுடன் லாரியில் வரும் என்று கூறி முடித்தார். .