பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிமைப் பயிற்சி முகாம்கள் 309 {முகாம் அலுவலர்) அமைச்சருக்கு முகாம் ப்ற்றி விளக்கினார்; சுற்றிக் காட்டினார். ஆசிரியர்களை அமைச்சருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். ஏற்கெனவே அமைச்சரை நன்கு அறிந்தவர் திருவேங்கடாச்சாரி. பிறிதொரு சமயம் இங்கேயே நடைபெற்ற முகாமில் திருச்சி வழக்கறிஞர் திரு. P. அரங்கசாமி ரெட்டியார் பங்கு கொண்டு சட்டசபையில் சட்டமுன் வடிவு சட்ட மாவதை விளக்கினார். மாதிரிக்கு ஒரு மசோதாவை நிறைவேற்றியும் காட்டினார் , மற்றொரு நாள் நெல்லை மாவட்ட நீதிபதி எ ஸ், அரங்கராசன் வருகை புரிந்தார்; இவர் எங்கள் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் திரு. நாராயண அய்யங்காருக்கு உறவினர்; முகாமைப் பார்வை யிட்டுச் சென்றார். இந்த முகாமில் கவியரங்கம் ஒன்று நடைபெற்றதாக நினைவு. இங்கிருந்து இரணியூர் ஒரு கல் தொலைவிலுள்ளது. ஒரு நாள் மாலை மாணவர்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டுசென்று திருக்கோயிலைப் பார்வையிட்டோம். அரிய சிற்பங்கள் நிறைந்த கோயில். சூரைக்குடி : காரைக்குடியிலிருந்து இராமவிலாஸ் சினிமா கொட்டகையுள்ள சாலை வழியாக கானாடு காத்தானுக்குள்ள நேர் வழியில் உள்ளது இவ்வூர். சாலையொட்டியே உள்ளது. முகாம் நடத்துவதற்கு இங்கும் வசதிகள் இருந்தன. இங்கு முகாம் நடைபெற்ற போதுதான் காரைக்குடியிலிருந்து அபிசீனியா பழ. நாச்சியப்பன் வந்து பேசினார். இவர் பர்மாவில் 35&stg; Laol u%p (I.N.A.—Indian National Army) பணியாற்றியவர். நேதாஜி சுபாஸ்சந்திரபோஸ் மீது பற்றும் பாசமும் மிகுதியாக உடையவர். மிகவும் உணர்ச்சி வசப்பட்டுப் பேசி எல்லோரையும் உணர்ச்சிக் கடலில் ஆழ்த்தினார் என்பது இன்றும் (அக்டோபர்-89) என் மனத்தில் பசுமையாக உள்ளது. மாற்றுார் : காரைக்குடி இருப்பூர்தி குடியிருப்பி லிருந்து சுமார் 4 கல் தொலைவிலுள்ளது இந்தச் சிற்றுரர்.