பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

母夏器 தினைவுக் குமிழிகள்-; காலத்தை வீணாக்காதிருத்தல், நாட்டுப்பற்று, உடல் நலத்தைப் பேணல், உள்ளத்தைத் தூய்மையாக வைத் திருத்தல் போன்ற நற்குணங்களையும் நற்பழக்கங்களை யும் உடையவனாக இருந்து வாழ்தல் என்பது குறிக் கோள். கட்டுப்பாடுடனும் ஒற்றுமையுடனும் வாழ்தல், பிறர் கருத்துக்கு மதிப்பு தருதல், தன் கருத்தை வலிந்து ஒருவர்மேல் திணிக்காதிருத்தல், சமத்துவம், சகோரத் துவம் போன்றவைகளும் குறிக்கோளாகக் கொள்ளத் தகும். இதற்கேற்ற பயிற்சி பள்ளியிலேயே (ஆறாண்டுக் காலம்) தரவேண்டும் என்பது புதிய கல்விக் கொள்கை யாக இருந்தது. இதைச் செயற்படுத்துவதற்குப் பள்ளி களில் பணியாற்றப் போகும் ஆசிரியர்கள் பயிற்சி பெற் றிருத்தல் வேண்டும் என்பதை நோக்கமாகக்கொண்டு பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெறும் ஆசிரியர்கள் குடிமைப் பயிற்சியும் பெறவேண்டும் என்ற கல்வித்திட்டத்தின்படி பயிற்சிக் கல்லூரிகள் இதில் பயிற்சி அளித்துவந்தன. பத்து நாட்கள் கல்லூரிக்கு வெளியே இப் பயிற்சி நடை பெறல்வேண்டும் என்பது விதி. இத்திட்டம் செயற்பட்ட முறையை விளக்க நினைக் கின்றேன். அழகப்பா பயிற்சிக் கல்லூரியில் முதலில் 150 ஆண்கட்குத்தான் இடம் இருந்தது. இரண்டு ஆண்டு கட்குப் பிறகு 30 பெண்கட்கும் பயிற்சி பெற இடம் ஒதுக்கப் பெற்றது. தக்க இடங்கள் தேர்ந்தெடுக்கப் பெற்று உண்டி, உறையுள் இவற்றிற்கு ஏற்பாடு செய்து அந்த இடத்தில் பயிற்சி தொடங்கும் முதல்நாள் மாலையே அணி வகுக்கப் பெறும். பெண்கள் வந்த பிறகு ஐந்து அணி களாகப் பிரித்தனர். ஒவ்வொரு அணிக்கும் ஒர் அணித் தலைவர், அணித்துணைத்தலைவர் என்று தேர்ந்தெடுக்கப் பெறுவர். பெண்களின் அணியைப்பற்றிப் பிரச்சினைகள் இரா. ஆண்கள் நான்கு அணிகளாகப் பிரிவர், 1, 2, 3, 4.....100 வரை எண்கள் தரப்பெற்று 5, 6, 7, 8, 9, 10, 11, 12;.என்ற முறையில் பிரிந்து 4 அணிகளாகுவர்.