பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிமைப் பயிற்சி முகாம்கள் 8 & பிறகு அவர்கள் அணிகளுக்குள்ளேயே தலைவர், துணைத் தலைவர் என்று தேர்ந்தெடுத்துக் கொள்வர், 130பேரும் சேர்ந்து ஒரு பொதுத்தலைவரைத் தேர்ந்தெடுப்பார். Qurg; ; 5ama'ass; School Pupil Leader (SPL) stairplb of 3,369.svgisi Squad Pupil Leader (CPL) argårsyth வழங்கப் பெறுவர். அணித்தலைவர் அணியின் ஒழுங்கு முறையையும், பொதுத் தலைவர் எல்லா அணிகளின் ஒழுங்கையும் கவனித்துக் கொள்வார். ஒவ்வொரு அணிக்கும் இருக்கை வசதிகள் பிரித்து அளிக்கப்பெறும். மகளிருக்குத் தனி இடம் ஒதுக்கித் தரப்பெறும். இவர்களுடைய வசதிகளைக்குமாரி மெய்யப்பா என்னும் பேராசிரியை பார்த்துக் கொள்வார். பெண்கள் கழிப்பிடங்களைப் பயன்படுத்துவர்; ஆண்கள் விருப்பப்படி செய்து கொள்வர்: கழிப்பிடங்களையும் பயன்படுத்துவர்; வெளியிலும் செல்வர். விடுதிகளில் மறைவாகக் குளிப் பதற்கு குளிப்பறைகள் இருந்தன. முகாம் அமைப்பதற்கு முன்னர் முதல்வர், திருவேங்கடாச்சாரி, நான் அந்தந்த இடங்களைப் பார்வையிட்டு இவ் வசதிகளையெல்லாம் சோதித்து அறிந்த பிறகு அந்த இடம் தேர்ந்தெடுக்கப் படும். செட்டி நாட்டுப் பகுதியில் பணியாற்றிய எங்கட்கு இவ்வசதிகள் இயல்பாகவே அமைந்திருந்தது எங்கள் பேறு என்றே கருதுகின்றோம். நாடோறும் அதிகாலை 5-45க்கே பள்ளித் தலைவர் {SPL) கீழ்க்கை (Whistle) ஒலியால் அணித் தலைவர். களை எழுப்ப அவர்கள் அணியிலுள்ளவர்களை எழுப்பி விடுவார். 5-45 முதல் 6-00க்குள் காலை காஃபி பானம் முடிந்து விடும். 6-6-30 வரை உடற்பயிற்சிப் பேராசிரியர் உடற்பயிற்சி தருவார். இதன் பிறகு குளியல் முதலியவை நடைபெறும். 7-45 மணிக்குள் குளியல் வேலை, வசிக்கும் இடங்களைத் துப்புரவு செய்து தத்தமக்குரிய பொருள் களை ஒழுங்காக வைத்தல், தாம் ஒழுங்காக ஆடைகள்