பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.14. நினைவுக் குமிழிகள்-3 அணிகள் முதலியவற்றை முடித்துக் கொண்டு தயாராகி விட வேண்டும். பள்ளித் தலைவர் (SPI) இவற்றை. யெல்லாம் சரி பார்த்துப் பிறகு முகாம் தலைவரிடம் வந்து (திருவேங்கடாச்சாரிதான் பெரும்பாலும் முகாம் தலைவ ராக இயங்குவார்) நாங்கள் தயார்' என்று அறிவிப்பார். முகாம் தலைவர் மூன்று பேராசிரியர்களை இட்டுக் கொண்டு சென்று மாணவர்கள் வசிக்கும் இடங் களைப் பார்வை இடுவார். மூன்று பேராசிரியர்களும் தனித்தனியாக அணிகட்கு மதிப்பெண்கள் வழங்குவர். இவற்றைக் கூட்டி அதிகமாகப் பெற்ற முதல், இரண்டு, மூன்று அணிகளின் பெயர்கள் கொடியேற்றும் நிகழ்ச்சிக்குப் பிறகு மதிப்பெண்கள் வழங்கிய ஆசிரியர் ஒருவரால் அறிவிக்கப் பெறும். எட்டு மணிக்குப் பேரவை கொடிக் கம்பத்தருகே வந்து பகர வடிவில் கூடும். ஒவ்வொரு அணித் தலைவரும் அவரவர் அணிகளைத் தங்கும் இடங்களிலிருந்து அணி அணியாகப் படையணிச் செலவு போல் நடத்திக் கொண்டு வந்து நிறுத்துவார். பள்ளித் தலைவர் எல்லாம்: தயார்' என்று அன்றைய கொடியேற்றும் பொறுப்பி லிருப்பவரிடம் கூற அவர் கொடியேற்றுவார். எல்லோரும் ஒழுங்காக நின்று கொடி வணக்கம் செய்வர். 8-30 முதல். 9-30க்குள் சிற்றுண்டி, காஃபி வழங்கப்பெறும். இவற்றை முடித்துக் கொண்டு 10 மணிக்கு வகுப்பிற்கு வந்து தயாராக இருப்பர். 1 0-12 வரை. பாடத். திட்டத்தையொட்டிச் சொற்பொழிவுகள் நடைபெறும்; இருவர் வகுப்பை ஏற்பர். . பகல் 12-15க்கு நண்பகல் உணவு. ஒரு மணிக்கு இது முடியும். மணி முதல், 2 மணி வரை ஒய்வு . 2-4 மணி வரை மீண்டும் வகுப்புகள் தொடரும். சில நாட்கள் (2,3 நாட்கள்) பிற்பகல் நாடாளுமன்றம் நடைபெறும் முறைகள் விளக்கப்பெறும். இது போலி நாடாளு