பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிமைப் பயிற்சி முகாம்கள் 蕊覆盘 மன்றம் (Mock Parliament) என்று வழங்கப்பெறும். ஏதாவது மூன்று சட்ட வாசகம் (Clause) கொண்ட சட்டமுன் வடிவு தயாரிக்கப் பெற்று அது சட்டமாக நிறை வேறும் முறை விளக்கப்பெறும். 4-15 முதல் 4-45 வரை மாலைச் சிற்றுண்டி, காஃபி. அதன்பிறகு 7-30 வரை பணிகளிலிருந்து விடுதலை. வெளியில் கற்றிப் பார்க்கலாம். 7.30 மணிக்கு இரவு உணவு. 8.15 முதல் 10 மணி வரை கலை நிகழ்ச்சிகள். இதில் மெல்லிசை. சிறு நாடகங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஒவ்வொரு அணியும் போட்டி யாக நிகழ்ச்சிகளை வழங்கும். முகாமில் கலந்து கொண்டுள்ள மாணாக்கர்கட்கும் பேராசிரியர்கட்கும் கண்ணுக்கும் காதிற்கும் இவை நல்விருந்தாக அமையும். இங்குத்தான் மாணாக்கர்களின் தனித் திறமை, தனிப் பண்பு, சமூகப்பழக்கம் முதலியவற்றை அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். திருப்பாராய்த்துறை : பேராசிரியர் சீநிவாசன் முதல் வராக இருந்த காலத்தில் இங்கு முகாம் அமைக்கும் பேறு கிடைத்தது. சித்பவாநந்த அடிகள் மனமுவந்து முகாம் அமைக்க இசைவு தந்தார். நானும் திருவேங்கடாச்சாரி யும் இங்கு வந்து இட வசதிகளைச் சரி பார்த்ததாக நினைவு. எங்கள் தேவைகளை நாங்கள் அடிகளாரிடம் தெரிவிக்க, அடிகளார் ராமுடு (அலுவலக மேலாளர்), பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. இராமகிருஷ்ணன் இவர்களைக் கொண்டு எங்கள் தேவைகளை நிறைவு செய்தார். பிற இடங்களில் எல்லாம் உணவு வசதிகட்கு நாங்களே எங்கள் கல்லூரி சமையல்காரர்களையும், வேறு சில ஆட்களையும் கொண்டு ஏற்பாடுகள் செய்து கொண்டோம். இராமேச்சுரத்தில் உணவு விடுதி அய்யரிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு ஏமாந்ததைத்