பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盏贾密 நினைவுக் குமிழிகள்-3 தவிர, பிற இடங்களில் நாங்களே ஏற்பாடு செய்து கொண்டதால் மாணாக்கர் நன்கு உண்டு மகிழ்ந்தனர். உணவு பரிமாறும் பொறுப்பும் நாளொன்றுக்குச் சிலராகப் பொறுப்பு தரப் பெற்றது. அவர்களும் தட்டுத் தடுமாறிப் பயின்றபோது உண்பவர்கள் குறைகளையெல்லாம் நிறைகளாகக் கொண்டு மகிழ்ந்தது எங்கட்குப் பெரு மகிழ்ச்சியைத் தந்தது. திருப்பாராய்த் துறையில் ஆள் ஒன்றுக்கு நாள் கட்டணம் இவ்வளவு தொகை என்று கணக்கிட்டு உண்வுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதால் எங்கட்கு உணவு பற்றிய சங்கடங்கள் ஏற்பாடு செய்வதில் தொல்லைகள் இவை இல்லாமல் போயின. தவிர பி.டி. மாணவர்கட்கு விடுதியில் உணவு தயாரிக்கும் முறை (கஞ்சி வடிக்காது தயாரிக்கும் முறை), காய்கறிகள் செய்யும் வகைகள், மாவு அரைக்கும் முறைகள், பாலுக்கு ஏற்பாடு செய்யப் பெற்றிருக்கும் வழி வகைகள் (மாடு பராமரிப்பு முதலியவை), இவை எல்லாவற்றையும்விட மாணாக்கர்கள் திறமையாக உணவு, சாம்பார், ரசம், மோர் முதலிய வற்றைப் பரிமாறும் லாவகம், காஃபிக்குப் பதில் மால்ட் கொள்ளல், மாணாக்கர்கள் உண்ணும்முன் மந்திரம் சொல்லுதல், உண்டு முடித்த பின் அநுமனுக்கு விண்ணை இடிக்கும் முறையில் சேர்ந்து முழங்கும் மரியாதை முழக்கம், தட்டுகளைத் தாங்களே கழுவி வரிசையாக வைக்கும் ஒழுங்கு முறைகள், மாணாக்கர்கள் ஆசிரியர் களுடனும், பெரியவர்களுடனும், புதியவர்களுடனும் பணிவாகப் பழகும் முறைகள் இவற்றையெல்லாம் கவனிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. புதியவர்களாகப் பணியாற்றப் போகும் ஆசிரியர்கள் இவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? - இவை தவிர, மாணாக்கர்கள் கழிப்பிடங்களைப் பயன்படுத்திய பிறகு அவற்றை எளிதாகத் தூய்மை செய்வதற்கேற்ற அமைப்பு, நீச்சல் குளத்தைப் பயன்