பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 நினைவுக் குமிழிகள்: அனைவரும் ஏமாற்றமடைந்தனர். அவர் வருகை புரிந் திருந்தால் முகாமிற்கு ஒரு களை தட்டியிருக்கும். அடிகளாரின் ஆசியும் அவருக்குக் கிடைத்திருக்கும்.

  • குமிழி-146 39. என் பதவி உயர்வு

15Hன் துறையூரிலிருந்து காரைக்குடிக்கு வந்து பணி யேற்ற போது பேராசிரியர் நிலையிலேயே பணி கிடைத் திருக்க வேண்டும். அதற்கு வேண்டிய ஊழ் இன்மையால் கிடைக்கவில்லை. விளம்பரத்தைப் பார்க்கவே ஊழ் இல்லை. எல்லோருக்கும் நியமன ஆணை பிறப்பித்த பிறகுதான் தமிழ்த் துறை பற்றிய சிந்தனையே எழுந்தது. காரணம், தமிழ்த்துறைக்கு ஒரு விண்ணப்பம் கூட வரவில்லை. ஏதோ மறைந்து கிடந்த பழவினை செயற் பட்டது. சா. க. மூலம். விரிவுரையாளர் (இப்போதுள்ள துணைப் பேராசிரியர் பதவி) பதவி கிடைத்தது. இது வினையின் பயன் என்றே கொள்ளுதல் வேண்டும். ஊழ்" என்ற சொல்லுக்கு இருவினைப் பயனும் செய்தவனையே சென்றடைவதற்கேதுவான நியதி' எனப் பொருள் உரைப்பர் பரிமேலழகர். இதன் வலிமையை சமண முனிவர், பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று வல்லதாம் தாய்நாடிக் கோடலைத்-தொல்லைப் பழவினையும் அன்னதகைத்தே; தற்செய்த கிழவனை நாடிக் கொளற்கு." என்ற பாடலால் விளக்குவர். 1. ஊழ் அதிகாரம் காண்க. 2. நாலடி-101 (பழவினை)