பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

茎$盘 தினை ஆக்குமிழிகள் . றாலும், ஆதில் ஓர்.உள் நோக்கம் இருப்புதாக என் மூளை யில் உதயமாயிற்று. அதை அறிய முடியாவிடினும், பதவி உயர்வைத் தள்ளிப் போட்டு விட்டால், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற கருத்தை நோக்கமாகக் கொண் டிருந்தல் வேண்டும் என்பது வெள்ளிடை விலங்கலாகத் தெரிந்தது. இஃதெல்லாம் பதவி உயர்வு கோரி அனுப்பப் பெற்ற விண்ணப்பத்தின் விளைவு என்பதை அறிந்தேன். இஃது என் பதவி உயர்வு விஷயத்தில் போடப் பெற்ற முதல் தடை. என்ன செய்யவேண்டும் என்பதுபற்றி என் மூள்ை சிந்திக்கத் தொடங்கியது. ம்றுநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு திருச்சியில் மாவட்ட நீதிபதியின் அலுவலகத்தில் கிரஸ்தாரராகப் பணியாற்றி வந்த என் அரிய நண்பர் M.கிருஷ்ணசாமி செட்டியாரைக் கலந்து யோசிப்பதற்காகச் சென்றேன். நிலைமையை எடுத்துக் கூறினேன். மூப்புடைமைபற்றி யோசித்தோம்: ஒரு முடிவுக்கு வந்தோம். சுற்றறிக்கையைக் கண்டு கொள்ளாமல் முன் எழுதிய விண்ணப்பத்தைத் தொடர்ந்து எழுதுவது போல் ஒரு கடிதம் தயாரித்தோம். (1) எல்லா ஆசிரியர்களும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் சேர்ந்தமையால் அவர் களுடைய மூப்புடைமையை நிர்வாகம் அறுதியிட்டிருக்க வேண்டும். அது செய்யப்படாமையால் இப்போது நிர்வாகம் தன் விருப்பப்படி செய்யக் கூடாது. ஆகவே இப்பதவி உயர்வு மட்டிலும் அதை விட்டொழித்து ஏனைய தகுதிகளைக் கருத்தில் கொள்ளவேண்டும். (2) பல்கலைக் கழக விதிப்படி ஆசிரியர் குழுவில் பேராசிரியர் நிலையில் இருவர் இருத்தல் வேண்டும். திரு வேங்கடாச்சாரி கல்லூரியிலேயே வேறு துறையில் பணியாற்றிக் கொண்டு அங்கேயே ஊதியமும் பெறுவதால் அவர் ஆசிரியர் குழுவில் இல்லாததாகக் கருதப்பெறுதல் வேண்டும். இப்படிக் கருதினால் பேராசிரியர் பதவியின் இன்றியமையாமை எழுகின்றது. எங்கும் தமிழ், எல்லாம்