பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் பதவி உயர்வில்.தற்பட்ட தடைகள் 38s தமிழ் என்ற கொள்கை நடைமுறையில் இருக்கும் இக்காலத்தில் தமிழ்துறைக்கு முன்னுரிமை (Prioகity), அளித்து பதவி உயர்வு செய்வது நிர்வாகத்திற்குப் பெருமை . - 3. விரிவுரையாளர் நிலையில் இருக்கும் நால்வரில் (அ) K. நாராயண் அய்யங்கார் (ஆங்கிலம்) வரலாற்றில் எம்.ஏ (இரண்டாம் வகுப்பு) பட்டம் பெற்றவர்; பி.ஏ (ஆங்கிலம்) பட்டத்தில் இரண்டாம் வகுப்பு, எல்.டி. பட்டம் உண்டு. (ஆ) எஸ். கிருஷ்ண்ய்யங்கார் (கணிதம் எம்.ஏ (கணிதம்) மூன்றாம் வகுப்பு; எல்.டி யில் முதல் வகுப்பு: முதல் நிலை தாம் கற்பிக்கும் பாடத்தில் எம். ஏ. இரண்டாம் வகுப்பு, பி.ஏ. முதல் வகுப்பு இருந்தால் போதும்; இதனால் இருவருக்கும் பல்கலைக் கழகத்தில் விதிவிலக்கு பெறவேண்டி வந்தது. .இ) எனக்கு பி.எஸ் சி முதல் வகுப்பு, மூன்றாம் நிலை; பி. ஏ.யில் முதல் வகுப்பு: முதல் நிலை; தவிர, வித்துவான் பட்டம். எல். டி பட்டம் இருந்தது. வேலையில் சேர்ந்த அன்று எனக்குதான் எல்லாத்தகுதிகளும் இருந்தன; விதிவிலக்கு பெறவேண்டிய நிலை இல்லை. பணியை ஒப்புக் கொண்ட ஓராண்டிற்குள் தமிழ் எம்.ஏ இரண்டாம் வகுப்பு, இரண்டாம் நிலை பெற்றேன். பணியின் ஏழாண்டுக் காலத்தில் தமிழ் பயிற்றும் முறை (விரிவான் பெரிய நூல்), அறிவியல் பயிற்றும் முறை (இதுவே இத்துறையில் முதல் நூல்) என்ற இரண்டு நூல்களை வெளியிட்டிருந்தேன். (ஈ) அய்யாத் துரை ஜேசுதாசன் (அறிவியல்) பி.ஏ அறிவியலில் இரண்டாம் வகுப்பு: எம்.எட் பட்டம் பெற்றவர். எல்லோரும் பணி ஒப்புக் கொண்ட ஒரு திங்களுக்கு பிறகு வந்து சேர்ந்தவர். கற்பிக்கும் பாடத்தில் எம்.ஏ. பட்டம் இல்லை. இவற்றால் எல்லாத் தகுதிகளும், சிறப்புத் தகுதிகளும் எனக்கு உண்டு என்று எடுத்துக் காட்டி விளக்கப் பெற்றது. - - - - - -