பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பதவி உயர்வில் ஏற்பட்ட தடைகள் _器盏夏” என்று சொல்லி அனுப்பிவிட்டாராம். விக்கினங்களைத் தடுக்கும் விநாயகப் பெருமானே சா.க. வடிவில் நின்று எனக்குத் துணையாக நின்றார் போலும் என்று." நினைத்துக் கொண்டேன். கணபதி ராயன்-அவனிரு காலைப் பிடித்திடுவோம்; குணமுயர்ந் திடவே-விடுதலை - கூடி மகிழ்ந்திடவே, ! என்ற பாடல் நினைவிற்கு வந்தது; அவன் திருவருள் என்னை மெய் மறக்கச் செய்தது. மற்றொரு நாள் நான் சா. க. இல்லத்திற்கு நான் எழுதிய இல்லற நெறி' என்ற நூலின் படியைக் காட்டச் சென்றிருந்த போது. சா.க. இதைச் சொன்னார். இஃது என்னைத் திடுக்கிடச் செய்தது. நான் அவரை, தாங் கள் இதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? அவரிடம் என்ன சொன்னீர்கள்?' என்று வினவ, அவர் 'ரெட்டியார் இங்கு வந்து ஏழாண்டுகள் ஆகின்றன. "தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவர். உழைப்பின் உருவம். அவருக்கு ஊரில் நல்ல பெயர். உனக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை. இருவரும்: ஒருவருக்கொருவர் விரோதிகளும் அல்லவே. நீ அதைமறந்து விடு' என்று சொல்லி அனுப்பி விட்டேன் என்றார். நான் இப்போது தொலைபேசியில் கூப்பிடுங் கள். நான் அவரிடம் பேசுகின்றேன், என்று சொல்ல, அவரும் அவ்வாறு கெய்தார். தொ. பே. பேச்சில் அவர் மிகவும் கோபப்படுகின்றார் என்பதை அறிந்தேன். உடனே, "தொ. பே. யில் அதிகம் பேச வேண்டாம். நானே உங்கள் இல்லத்திற்கு நேரில் வருகின்றேன்' என்று. சொல்லி விட்டு நேராக அவர் இல்லம் சென்றேன். பா.க தோ. பா. ஆறு துணை-1