பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霹雳 - நினைவுக் குமிழிகள்-3 இல்லத்தில் அவரைச் சந்திக்கும்போது அவர் மிகக் கோபமாக் இருந்தார்; கோபத்துடனும் பேசினர்: "சா. க. விவரமாகச் சொன்னார்; தாங்கள் இதை தம்புகின்றீர்களா?' என்றேன். அவர் உங்கள் தோழ் ஆசிரியர்கள் அனைவருமே இங்கு வந்து என்னிடம் சொன்னார்கள்' என்றார். ஒவ்வொருவராக வந்து சொன்னார்களா? கும்பல்ாக வந்தார்கள்ா? இதை மெய்ப் பிக்க முடியுமா?’ என்றேன். 'முடியும் என்று அடித்துச் சொன்னார். மிஸ்ட்ர் மணி, ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். என்னுடைய பெருமை மானம் போகும் வண்ணம் கட்டி விட்ட கரடியை என் முழு மூச்சு கொண்டு எதிர்ப்பேன்; நீதிமன்றம் வரையில் இழுப்பேன்: என்றேன். இப்பொழுதே புறப்படுங்கள். இரகசிய விசாரணை, நேருக்கு நேர் விசாரணை எதை வேண்டு மானாலும் மேற்கொள்ளலாம். நீங்கள் கோபமாகப் பேசு கின்றீர்கள்; நான் அடங்கிப் பேசுகின்றேன். நானும் கொதித்தெழுந்தால், உண்மை தெளிவாகாது. புறப்படுங் கள்!' என்று சொல்வி விட்டு மிதி வண்டியில் திரும்பி விட்டேன். - நான் கல்லூரி வாசலுக்கு வந்த போது மாணவர் கூட்டம் கொடியேற்று விழா நடந்து கொண்டிருந்தது. இது குடிமைப் பயிற்சிக்கு ஒருவித ஒத்திகை. முதல்வர் தொலைபேசியில் பேசிவிட்டு கூட்டத்திற்கு வந்ததை அறிந்தேன்; நேரிலேயே பார்த்தேன். அப்போது புதிய கட்டடத்திற்கு மாறியிருந்தோம். தொலைபேசி இடம் மாற்றம் செய்யப் பெறாத நிலை. இதனால் முதல்வர். தொ. பே. க்குப் போய் வந்ததைக் காட்டிக் கொடுத்து விட்டது. உட்னே புறப்பட்டு வருவதாகச் சொன்ன மணியன் வரவில்லை:விசாரணை பயன்படாது.உங்கட்கு விரோத மாகத் திரும்பி விடுதலும் கூடும். உங்களிடம் வந்து