பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 3 நினைவுக் குமிழிகள்-3 துறையூர் வந்து லாரிக்கு ஏற்பாடு செய்தேன் திரு. நல்லு சாமி ரெட்டியார் மூலமாக. திருச்சியில் பகல் ஒரு மணிக்கு இருப்பூர்தி வண்டி இருந்தது, சாமான்களை ஏற்றும் பொறுப்பையும் லாரியில் வரும் பொறுப்பையும் முத்துசாமிக்கு விட்டுவிட்டு பகலுணவு முடித்துக்கொண்டு இரவுக்கும் உணவு தயார் செய்துகொண்டு காரைக்குடி புறப்பட்டேன். ஒன்பது ஆண்டுகள் சிற்றுார் வாழ்க்கைபோல் துறையூரில் வாழ்ந் தேன்; கடுமையாக உழைத்தேன். என் உழைப்பையும் பள்ளியின் வளர்ச்சியிலும் மாணவர்களின் முன்னேற்றத்தி லும் நான் கொண்டிருந்த அக்கறையையும் ஊர் மக்கள் நன்குஅறிவார்கள்; தோழ ஆசிரியர்கள் நன்கு உணர்ந்திருந் தனர். ஆசிரியர் P. மாதுர்பூதத்தின்மூலம் பேருந்தில் ஐந்து இடங்கட்கு ஏற்பாடு செய்திருந்தேன். அது என் அருமை நண்பர் மணவாளன் ஒட்டும் வண்டி. எங்களை நேராக இருப்பூர்தி சந்திப்பிலேயே கொண்டு வந்து விட் > |ருபடி,ாத சந. 女 இ! டிடுமாறு கேட்டுக்கொண்டிருந்தேன். அவரும் அன்புடன் இதைச்செய்தார். துறையூரில் நான் வீட்டை விட்டுப் புறப்படும்போது |டன் சேர்ந்து உழைத்த ஆசிரியர்கள், என்பால் நல்லுதவி பெற்றுக் கல்விகற்கும் சில மேல்வகுப்பு மாணவர் கள், திரு. நல்லுசாமி ரெட்டியார், எழுத்தர் திரு. K. சீனிவாச அய்யங்கார் அருகிலிருந்தனர். இவர்களைப் பார்க்கும் போது பழைய நினைவுகள் வெளிவந்தன. நான் வளர்த்த பள்ளியை விட்டுப் போகிறேனே" என்று நினைக் கும்போது என் கண் கலங்கிவிட்டது: அழுகையே வந்து விட்டது. ஆசிரியர்கள், சீநிவாச அய்யங்கார், நல்லுசாமி ரெட்டியார் இவர்கள் கண்களும் குளமானதைக் கண்டேன்; அவர்கள் என்பால் கொண்ட அன்பைப் புரிந்துகொண் டேன். ஒருவாறு தேறி குழந்தை இராமலிங்கத்துடன் என் மனைவி என் மனைவியின் தாய், என் அன்னை, என் மைத்துனரின் முதல் மனைவி இவர்களுடன் பேருந்தில் ஏறி