பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் பதவி உயர்வில் ஏற்பட்ட தடைகள் 33 ア என் மீது செட்டியார் மிகவும் அன்புள்ளவர்; என் திறமையையும் அளந்து அறிந்தவர். பதவி உயர்வு வருவது உறுதி. நான் பார்ப்பதால் அவர் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை. என்று சொலியனுப்பி விட்டேன். இதைப்பற்றிச் சா. க. விடம் யோசனை கேட்டேன். பார்ப் பதில் தவறு இல்லை. காரைக்குடிவரும்போது அவரை விளையாட்டரங்கிலுள்ள விருந்தினர் இல்லத்தில் பாருங் கள். கானாடுகாத்தான் போகவேண்டாம் (சிலவற்றைச் சொல்லி எச்சரித்தார். அவற்றை வெளியிட விரும்ப வில்லை) என்று அறிவுறுத்தினார். ஒரு நாள் ராய. சொ. என்னைச் சங்கத்துக்கு வரு மாறு ஆள் அனுப்பியிருந்தார். அங்குச் சென்று அவரைப் பார்த்தேன். ரெட்டியார், C.W.CT.V. உங்களைக் கான டு காத்தான் வந்து தன்னைச் சந்திக்குமாறு சொல்லியனுப்பியிருந்தார். எல்லாம் நல்லதாகவே 3 * முடியும். போய்ப் பாருங்கள். ' என்றார். நான் சா. க. கூறியவற்றைக் கூறிப் போவதற்கு தயங்கியதை எடுத் துரைத்தேன். அப்படி ஒன்றும் நடைபெறாது.துணிவாகப் போகலாம். தங்கட்குத் தீங்கு நேரிட்டால் நான் பொறுப்பு. அப்படி ஏதாவது தீங்கு விளைவித்தால், அவர் இந்த ஊரில் வாழ முடியுமா? அவர் என்னிடம் சொல்லி யதைப் பார்த்தால் ஏதோ விஷயம் உங்களிடம் சொல்லப் போவதாகத் தெரிகின்றது. என்றார். ஒரு நாள் கானாடுகாத்தான் போவதாகத் தீர்மானித் தேன். ஒரு மணிநேரம் தாமதித்துக் கல்லூரி வருவதற்கு முதல்வரிடம் இசைவு பெற்றேன். மறுநாள் காலை 7 மணிக்கே சிற்றுண்டியை முடித்துக் கொண்டு திருச்சி போகும் பேருந்தில் ஏறிக் காலை 8-மணி சுமாருக்குக் கானாடுகாத்தான் * சென்று செட்டியார் வீட்டை விசாரித்துக் கொண்டு அவர் இல்லத்தை அடைந்தேன். வீட்டிலுள்ள வேலையாள் செட்டியார் நீராடுவதாகத் தெரிவித்தான். நான் தாழ்வாரத்தில் ஒரு பக்கமாக நி-22 -