பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலைத் தமிழில் பயிற்றல் கருத்தரங்கம் 341 முற்பகல் 1 மேணிக்கு அறிவியல் அறையொன்றில் கூடினர். நாடோறும் அறிவியல் பல துறைகளிலும் கலைச் சொற் கள் உருவாக்கம் பற்றி விரிவாகக் கலந்தாயப்பெற்றது. ஒவ்வொரு துறையிலும் மாதிரிப் பாடங்கள் நடத்திக் காட்டப் பெற்றன. இயற்பியலில் டாக்டர் சிரீராமனும் தாவர இயலில் திரு K. அரங்கசாமி அய்யங்காரும் சிறப் புடன் திகழ்ந்தனர். அந்தக் காலத்தில் எல்லாத் துறை களிலும் டாக்டர் பட்டம் (Ph.D) பெற்றவர்கள் அதிகமாக இல்லை. அஃது இல்லாமலேயே பல துறைகளில் ரீடர், பேராசிரியர்கள் கூட இருந்தனர். இயற்பியல் துறையில் ரீடராகப் பணியாற்றிய R. K. விசுவநாதனுக்கு டாக்டர் பட்டம் இல்லை. துறைகளிலும் டாக்டர் பட்டம் பெற்ற வர்கள் அதிகம் இல்லாததால் வழி காட்டிகளும் அருகி இருந்தனர். இதனாலும், வேறு காரணங்களாலும் பலர் இப்பட்டம் பெற முடியாத நிலையிலிருந்தனர். மாதிரிப் பாடங்கள் எடுத்தவர்களில் தலை சிறந்து விளங்கியவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் திரு. K. அரங்கசாமி அய்யங்கார். இவர் எடுத்த பாடம் மிகவும் அற்புதமாக அமைந்திருந்தது. 20 ஆண்டுகட்கு மேல் பணியாற்றிய இவர் அன்று வரை விரிவுரையாள ராகவே இருந்தார் என்பது வருந்தத்தக்கதாக இருந்தது. நாடோறும் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு துணை வேந்தர் இல்லத்திற்கு வந்து பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பது அவர் கட்டளை. அவரும் 10 மணிக்குப் புறப்படுவார். தாம் அலுவலகத்தில் இறங்கிக் கொண்டு என்னைக் கருத்தரங்கு நடைபெறும் இடத்தில் இறக்கி விடச் சொல்வார். இவ்வாறு போய் வந்து கொண்டிருந்த பொழுது அரங்கசாமி அய்யங்கார் தமிழில் கற்பித்ததன் சிறப்பைத் துணைவேந்தரின் கவனத்திற்குக் கொணர்ந் தேன். ஒரு நாளாவது அவர் தமிழில் கற்பிப்பதைத் துணைவேந்தர் நேரில் காண வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அவரும் ஒப்புக் கொண்டார்.