பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலைத் தமிழில் பயிற்றல்-கருத்தரங்கம் 343 அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வருவதும் துணை வேந்தர் இல்லத்தில் தங்குவதும் வழக்கமாக நடை பெற்று வந்தன. திரு ரெட்டியார் என்னை நன்கு அறிவார். துணைவேந்தர் செயல் வழவழ’ என்று விளக் கெண்ணையை ஒத்தது என்பதும் அவருக்குத் தெரியும். ஒருநாள் காலை துணைவேந்தரைச் சந்தித்த போது, இருதயசாமி ரெட்டியாரும் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார். துணைவேந்தர் 1930 முதல் (நான் முசிறியில் 4-வது படிவம் படித்துக் கொண்டிருந்தது முதல்) என்மீது தந்தையைப் போல் பாசமும் அன்புமுடைய வர்; 1958 வரை என் உழைப்பையும் வளர்ச்சியையும் நன்கு அறிந்தவர். அதனால் அவரிடம் பலவித உணர்ச்சி களுடன் பேசினாலும் என்னைத் தவறாகக் கருத மாட் டார்; சினமும் கொள்ள மாட்டார். இதனையறிந்த நான் அவரிடம் தந்தையிடம் பேசுவதைப் போன்ற உரிமையுடையவனாக இருந்தேன். இருதயசாமி ரெட்டியார் என்னை நன்கு அறிந்தவராதலால், அவர் முன்னதாகவே துணைவேந்தரிடம் பேசினேன். ஐயா, நான் பிஎச். டி பட்டத்திற்கு ஆய்வு செய்ய விழை கின்றேன். காரைக்குடியில் அந்த வாய்ப்பில்லை; பலமுறை முயன்றும் சென்னைப் பல்கலைக் கழக விதிகளும் என்னை அநுமதிக்காமல் தடுத்து நிறுத்துகின்றன. ஓர் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் இங்கு எனக்குத் துணைப் பேராசிரியர் வேலை நல்கினால், விடுப்பில் வந்து பணி யாற்றிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பி விடு கின்றேன். காரைக்குடி வேலையைத் துறக்க விரும்ப வில்லை’ என்றேன். உடனே துணை வேந்தர், உடன்பாட்டில் விடையளிக் காமல் சுற்றி வளைத்துப் பேசத்தொடங்கினார். '"நான் கூட ரூ 2000/-வாங்குகின்றேன். அதற்கும் இதற்கும் என்று செலவு செய்த பிறகு ஒன்றும் மிஞ்சவில்லை.நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள். பிறகு வாய்ப்பு வரும்