பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器4每 நினைவுக் குமிழிகள் -3 மிஸ்டர் ரெட்டியார், இருங்கள். நான் அலுவலகத் திற்குப்போக ஆடையை மாற்றிக் கொண்டு வருகின்றேன். தங்களையும் கருத்தரங்கு நடைபெறும் இடத்தில் விட்டு விடுகின்றேன்' என்று சொல்லி மாடிக்குப் போனார். இப்போது கீழே என்னுடன் இருந்த திரு. இருதயசாமி ரெட்டியார் (திரு பிள்ளையவர்களின் நெருங்கிய நண்பர்) என்னை நோக்கி, நன்றாகச் சொன்னீர்கள் உணர்ச்சி வசப்பட்டு உணர்த்தினரீர்கள். நடுத்தர வயதுடைய ஒருவரின் உணர்ச்சி எப்படியிருக்கும் என்பதை உணர்த்தி னிர்கள். ஆனால் இந்த முண்டத்திற்கு (செல்லமாகச் சொன்னது:) எங்கு ஏறப்போகின்றது? நல்லவர்தான்; துணிவே இல்லாதவர். ஒவ்வொரு நிலையிலும் நல்ல தற்குக்கூட செயலாற்ற அஞ்சுபவர்...' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு வேலையாள் (சிறுவன்) வேகமாக ஒடி வந்து தங்களை ஐயா அழைக்கின்றார் கள்’’ என்று கூறினான்; நானும் ஏதோ பலன் காணப் போகின்றேன்’ என்று நினைத்துக் கொண்டு வேகமாக மாடிக்குச் சென்றேன். நிலைக் கண்ணாடி முன் நின்று கொண்டு ஆடைகளை உடுத்திக் கொண்டிருந்தார். கழுத்துப் பட்டைத். தொங்கலைக் (Tie) கட்டிக் கொண்டிருந்த சமயம். என்னைப் பார்த்ததும் மிஸ்டர் ரெட்டியார், காரைக்குடி யில் என்ன ஊதியம் கிடைக்கின்றது?’ என்று கேட்டார். 'அங்கு ரூ 850/- கிடைக்கின்றது' என்றேன். நலமாக இருங்கள். வாய்ப்பு வரும்போது கவனிக்கின்றேன்’’ என்று பதிலிறுத்தார். ஏதோ உதவவேண்டும் என்பது. தான் அவர் எண்ணம். என்ன செய்வது? பிஎச்.டி. பட்டம் பெறுவதற்கு இன்னும் ஊழ் வரவில்லை. இறைவனது திருவுள்ளம் வேறுவிதமாக இருக்கும்போது எனக்கு. எப்படிக் கிடைக்கும்?