பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 8 நினைவுக் குமிழிகள்-3 தில்லைப் பதியுடையான் சிற்றம்பலந் தன்னில் அல்லும் பகலும் நின் றாடுகின்றான்-எல்லைக்கண் அண்ணா மலைமன் அமைத்த கலைக்கழகம் கண்ணாரக் கண்டு களித்து." என்பது கவிமணியின் வாக்கு. இத்தகைய பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் உலக ஊழியர் போன்ற தமிழ்ச் செல்வர்களின் நாவில் பயிலும் தமிழையும் அவன் கேட்டதுபவிக்க வேண்டுமல்லவா? நான் பல்கலைக் கழகத்தில் தங்கியிருந்தபோது வேறொரு நிகழ்ச்சியும் நடைபெற்றது. விருந்தினர் இல்லத்தில் உணவு விடுதியின் உணவு உண்டு காலம் கழிக்கும் ஒருநாள் விருந்தினர் இல்லத்திலேயே சிற்றுண்டி அருந்த அழைத்தனர். தெ.பொ. மீ. அவர்கள் வந்திருக் கின்றார். இன்று அவரோடு சிற்றுண்டியும். பகல் உணவும் இரவு உணவும் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். தெ.பொ. மீ. அப்போது சென்னைமாநிலக் கல்லூரியில் தலைமைத் தமிழ் பேராசிரியராக இருந் தார். தெ. பொ. மீ.யை உணவு உண்ணும் மேசையின் அருகே சந்தித்தேன். ஏதோ தேர்வு விஷயமாக வந் திருக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் அவருடைய பேச்சில் துணைவேந்தர் தனிப்பட்ட முறையில் எழுதிய கடிதப்படி வந்துள்ளதாக அறிந்தேன். டாக்டர் ஏ.சி. செட்டியார் விலகிக் கொண்டதால் அந்த இடத்தில் நியமித்தற்கெனவே இந்த அழைப்பு இருக்க வேண்டும் என ஊகித்தேன். என் ஊகம் சரியாகப் போயிற்று. ஒருசில மாதங்களில் தெ. பொ. மீ. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியேற்றதை அறிந்து கொண்டேன். 3. மலரும் மாலையும்-993 (அண்ணாமலை மன்னர்) ,