பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 நினைவுக் குமிழிகள்-3 வீட்டைக் காவி செய்து விட்டுச் சிதம்பரத்தில் குடியேறி விட்டார் இவரும் இப்போது இல்லை. இரண்டாண்டு கட்கு முன்னர் சென்னையில் மாரடைப்பால் காலமானார். மூன்றாவதாக ஒரு ஞாயிறன்று தாவர இயல் பேராசிரியர் சீநிவாசன் பகல் விருந்து அளித்தார். இவர் வள்ளல் இராமலிங்க அடிகளின் திருமுறைகளில் உள்ளத் தைப் பறிகொடுத்தவர். கருத்தரங்கும் ஒருவாறு சிறப்பாக நிறைவேறியது. இந்தக் கருத்தரங்கு முடிந்த அன்று பல்கலைக் கழகத் தில் ஏதோ ஒரு பெரிய நிகழ்ச்சி நடைபெற்றது. இப் போது அது நினைவில் இல்லை. சென்னை மாநிலக் கல்வி. நிதியமைச்சர் திரு. சி. சுப்பிரமணியம் வந்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பெருவளநல்லூர் இராஜா சிதம்பரமும் வந்திருந்தார். துணைவேந்தர் அமைச்சருக்குப் பகல் விருந்து அளித்தார். நானும் விருந்தில் கலந்து கொண் டேன். அப்போது காரைக்குடியில் என் பதவி உயர்வு இழுபறியாகக் கிடந்தது. இதனை இராஜாசிதம்பரம் அவர்களிடம் சொன்னேன். சி. சுப்பிரமணியம் அப்போது அழகப்பர் அறத்தின் தலைவர். விருந்து முடிந்தவுடன் இராஜா சிதம்பரம் என்னை சி. சுப்பிரமணியம் தங்கி யிருந்த அறைக்கு இட்டுச்சென்று என்னைக் கவனித்துக் கொள்ளுமாறு வேண்டினார். திரு. சுப்பிரமணியம் 'ரெட்டியாரை நான் நன்கு அறிவேன். அவருடைய பிரச்னையையும் நான் அறிவேன். கவலைப்பட வேண் டாம்; நான் கட்டாயம் இதைக் கவனிப்பேன்’ என்று அன்புடன் கூறினார். எப்படியோஎனக்குப் பதவி உயர்வும் கிடைத்தது. - இரவு 7-30 மணிக்குப் பல்கலைக் கழகமும் திரு. சி. சுப்பிரமணியத்திற்கு ஒரு விருந்து அளித்தது. அதிலும் நான் கலந்து கொண்டு, அவசர அவசரமாகப் பெட்டி யுடன் இருப்பூர்தி நிலையத்திற்கு வந்தேன். வண்டி பத்து மணிக்கு என்பதாக அறிந்திருந்தேன். வண்டி கிளம்பு