பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 நினைவுக் குமிழிகள்-3 அடுத்து, பழநியில் புதிதாகத் தொடங்கப்பெற்ற பழநி, யாண்டவர் பண்பாட்டுக் கல்லூரி முதல்வர் பணிக்கும் விண்ணப்பம் போட்டேன். என்குல தெய்வமாக இருக்கும் முருகப் பெருமானே அருள் பாலிக்கவில்லை. நான் திருச்சியில் பயின்றபோது தங்கும் விடுதியில் தோழராக நெருங்கிப் பழகின R. சக்திவேல் (தேரோடும் வீதி, பழநி) என்பவருக்கு நிலைமை தெரிந்து எழுதுமாறு: கேட்டு இருந்தேன். அவர் தந்தையார் பக்தர்களுக்குத் தரிசனம் செய்து வைக்கும் இறைபணியில் ஈடுபட்டிருந் ததால் அவா குடும்பம் செல்வாக்குடன் திகழ்ந்தது. R. சக்திவேல் உள்புகுந்து உயர்மட்டத்தில் விசாரித்து, 'ஐயா, வந்திருக்கும் மனுக்களில் உங்கள் மனுவே தலை யாயது; எல்லாத் தகுதி, அநுபவம் பெற்றுள்ளீர்கள். இந்த ஆண்டு அப்பதவியை நிரப்பப் போவதில்லையாம். அடுத்த ஆண்டு சைதையில் பயிற்சிக் கல்லூரியில் பணி: யாற்றும் திரு. எஸ். ஆறுமுக முதலியாரை நியமிக்கப் போகிறார்களாம். அமைச்சர் (திரு. பக்தவத்சலம்) பரிந்துரைத்திருக்கிறாராம்' என்று விவரமான பதில் தந்தார். கிட்டதாயினும் வெட்டென மற' என்ற பாட்டியின் வாக்கை நினைந்து வாளா இருந்து விட்டேன். இச்சமயத்தில் கோலாலம்பூரிலுள்ள (மலேயார் பல்கலைக் கழகத்தின் விளம்பரம் கண்டு அதற்கு. விண்ணப்பித்தேன். விண்ணப்பப் படிவங்கள் எட்டு அநுப்பப் பெறவேண்டும். இதற்காக நன்முறையில் விண்ணப்பம் தயார் செய்தேன். இதையும், சான்றிதழ். கள், அத்தேதியில் வெளியிட்டிருந்த ஐந்து நூல்களைப் பற்றிய பத்திரிகை மதிப்புரைகள் இவற்றையெல்லாம். அச்சிட்டு (AIR MAIL தாளில்) கட்டைமைத்து அனுப்பி, னேன். மனுக்களைப் பரிசீலித்து இலண்டனில் தயாரிக்கப் பெற்ற குழுப்பட்டியில் (Pamel) என் பெயர் முதலில் இருப்பதாகவும், கிடைப்பது உறுதி என்றும் விசாரித்து எழுதியிருந்தார்கள்.K.W.AL.M.இராமநாதன்செட்டியார்,