பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்கலைக் கழகத்தில் நுழைய முயற்சி 35ど。 ஆனால் அந்தக் குழுப்பட்டியிலிருந்து ஒருவரை எடுக்கும் பொதுப்பு துறைத் தலைவரின் கையில் இருந்தது. அப்போது துறைத் தலைவராக இருந்தவர் மு. இராசாக் கண்ணனார்; அவர் தம் சாதியைச் சேர்ந்த உ.பழகி என்பவரை (அண்ணாமலைப் பல்கலைக் கழகம்) தேர்ந்தெடுத்துக் கொண்டதாகவும் மீண்டும் செட்டியார் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் என் குடும்பத்தில் எல்லோருக்கும் செல் சீட்டுகள் (Pass ports) வாங்கி வைத் திருந்தேன். திரைகடலோடி அலைகடலுக்கப்பால் தமிழ்ப் பணிபுரியும் வாய்ப்பை இறைவன் தரவில்லை. இதுவும் ஏழுமலையான் போட்ட தடைக்கல் என்றே கருதுகின் றேன். திருப்பதிப் பணியில் அமர்த்த வேண்டுமல்லவா? சென்னைப் பல்கலைக் கழகம் : சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலம்-தமிழ்ப்பேரகராதிப் பணி தொடங்கப்பட இருந்தது. தலைமைப் பதிப்பாசிரியர், துணைப் பதிப்பாசிரியர் பதவிகட்கு விளம்பரம் வந்தது. இரண்டிற்கும் விண்ணப்பங்கள் அனுப்பியிருந்தேன். பேட்டியும் வந்தது. அப்பொழுது டாக்டர் A.C. செட்டியார், கா. அப்பாதுரைப் பிள்ளை ஒய்வு பெற்ற கல்வித்துறை இயக்குனர் T.P. சந்தானகிருஷ்ணநாயுடு என்பவர்கள் பேட்டிக்கு வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் கள். இவர்களுள் அறிவியல் (இயற்பியல், வேதியியல்), கணிதம், கல்வி, உளவியல் இத்துறைகளில் நூல்கள் எழுதி ஆயிரக்கணக்கான கலைச் சொற்களைச் சிந்தித்தவன் நான் ஒருவனே. மனிதாபிமான அடிப்படையில் சிந்தித் தால், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றிச் சட்டமன்ற மேலவைக்கு ஆசிரியர் தொகுதியில் தேர்தலுக்கு நிற்கும் விஷயமாகக் கருத்து வேறுபாட்டி னால் பதவியைத் துறந்து நிற்கும் டாக்டர் A.C. செட்டியாரைத் தலைமைப் பதிப்பாசிரியராகவும், சரியான வேலையின்றி அல்லல்படும் என் அரிய நண்பர் கா. அப்பா நி-23 - -