பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

”总莎3 நினைவுக் குமிழிகள்-3 வெறுப்புகளும் கலந்து விடலாமல்லவா? எனவே, ஆராய்ச்சி முடிவற்ற பிரிவாகம் என்பது என் தாழ்மை யான கருத்து. என்று கூறி முடித்தேன். பேட்டி முடிந்தது. என்னை இருக்கச் சொன்னார்கள். நாராயணசாமி பிள்ளை பேசினார் : (என்னைக் காட்டி) 'இவரை நீங்கள் நியமித்துக் கொண்டால் கிடைத்தற் கரிய ஒருவரைப் போட்டுக் கொண்ட மன நிறைவு அடை வீர்கள்; கடுமையான உழைப்பாளி. தாம் உண்டு, தம் வேலை யுண்டு என்று இருப்பவர். துறையை நன்கு வளர்ப்பார்; துறைக்கு நல்ல பேர் ஈட்டித் தருவார். என்று சொன்னார். நானும் சில செய்திகளைத் தெரிந்து கொள்ள விழைகின்றேன். இசைவு தந்தால், என் ஐயத்தைத் தீர்த்துக் கொள்வேன்’ என்றேன். துணை வேந்தர் கேளுங்கள்’’ என்றார். நான், துறைவளர்ச் சிக்கு வாய்ப்பு தருவீர்களா? அதுவரையில் நான் தனித்து இயங்குவேனா? ஏதாவது ஒரு துறையுடன் இணைத்து வைப்பீர்களா? வீடு தருவீர்களா? P. F. உண்டா?’’ என்றெல்லாம் கேட்டேன். அவரும் துறை வளர்ச்சிக்கு வாய்ப்புண்டு; தனியாகத்தான் வைக்கப் பெறுவீர்கள்’’ என்று சொல்லி ஏனையவை எல்லாம் எல்லோருக்கும் பொதுதானே?’’ என்று சொல்லி முடித்தார். நானும் * மிகு புகழ் வாய்ந்த ஒரு பெரிய கல்லூரியில் பேராசிரியர் (Professor) பொறுப்பை விட்டு வருகிறேன். இருக்கும் இடத்தில் எனக்கு எந்தவித குறையும் இல்லை. கவலைப் பட்டு இப்படியெல்லாம் கேட்டேன். மன்னித்தருள்க’ என்று கேட்டுக் கொண்டு வெளியே வந்தேன். எல்லோரும் போய்விட்டார்கள்.K.குமாரசாமி ராஜா வும், P. பாலசுப்பிரமணியனும் எனக்காகக் காத்திருந்தார் கள். இந்த இருவரும் எனக்குதான் கிடைக்க வாய்ப்பிருக் கின்றது என்று சொன்னார்கள். நான் திருப்பதி சென்ற பிறகு எங்கள் மூவர் பெயர்களும் குழுப்பட்டியலில் (Panel) இருத்ததையும் என் பெயர் முதலில் இருந்ததையும் அறிந் தேன். நாங்கள் மூவரும் வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள்.