பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுச் சிதறல்கள் 36 I பள்ளியிறுதி வகுப்பில் ஒரு பெண்; பிராமண குலத்தவள்; ஆசிரியர் வேளாளர் வகுப்பைச் சார்ந்தவர். பழைய மாணவராதலால் அடிக்கடி என்னிடம் நெருங்கிப் பழகுவார். இவர் திருமணத்தை உறுதி செய்து கொண்டு தாலிக் கொடி செய்வதில் என் உதவியை நாடினார். எனக்குத் தெரிந்த நகைக் கடையொன்றில் இதைச் செய்து கொள்ள ஏற்பாடு செய்தேன். திருச்சியில் தந்தை பெரியார் தலைமையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு நான் போகும் வாய்ப்பும் ஏதோ முக்கிய அலுவலால் இல்லாது போயிற்று. நான் இந்த ஆசிரியருக் குப் பொருளுதவி செய்ததாகத் தாளாளர் C. W. CT. W: வேங்கடாசலம் செட்டியார் காதுக்கும்.எட்டச் செய்தனர், என் ஆப்த நண்பர்கள்’; இது நடைபெற்றது, என் பதவி உயர்வு நடைபெற்ற காலத்தில். தாளாளரே ஒரு சமயம் என்ன ரெட்டியார், நீங்கள் கலப்பு மனத்திற்கு உதவின. தாகக் கேள்விப்பட்டேனே' என்று என்னிடம் கேட்டே விட்டார். தாலிக் கொடி செய்யும் விஷயத்தில் வாய்ச் சொல் உதவிதான்' என்று சமாதானம் சொன்னேன். இதையும் ஒரு கருவியாகக் கொண்டு என் நண்பர்கள் என் பதவி உயர்வை நிறுத்த முயன்றிருக்க வேண்டும் என்பது என் ஊகம். பிராமணர்கள் இல்லாததையும் பொல்லாததையும் தாளாளரிடம் சொல்வி, எஸ். இரத்தினத்தை வேலை நீக்கம் செய்வதில் கொண்டு செலுத்தினர். அவர் கல்வித் துறைக்கு முறையீடு செய்து சில மாதங்களில் விட்டுப் போன சம்பளத்துடன் திரும்பவும் பணியில் சேர்ந்து கொண்டார். இதில் நிர்வாகம் தலையிட்டது சிந்தனை யற்ற செயல் என்பதைத் தாளாளர் பின்னர் உணர்த் திருக்க வ்ேண்டும். இப்போது, - காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்; கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்; , காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்: கான முண்டாம் சிற்பமுதல் கலைகள் உண்டாம்: