பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுச் சிதறல்கள் - ょ6 笠" கற்பிக்கும்போது அதனைக் கவனிக்கவும் செல்வார்கள். இத்தகைய வாய்ப்புகளில் எப்படியோ ஒருவரையொருவர் நேசிக்கத் தொடங்கினர். தனிமையாகச் சந்தித்துப் பேசியும் இருக்கலாம். குளத்துவின் வகுப்புத் தோழர்கள் இதைக் கவனித்துமிருக்கலாம். இவற்றிலெல்லாம் தோழர்கட்குச் சுவை இல்லை. நாடோறும் பகல் 1-2 மணியின்போது பகல் உணவு கொண்டு கை அலும்பும் போது நடைபெறும் நிகழ்ச்சியைத்தான் மாணவ மணிகள் அநுபவிப்பார்கள். கீழ்க்கோடியில் பகரவடிவில் அமைந் திருப்பன கல்லூரி கட்டடங்கள். சிறிது இடைவெளி' விட்டு மேல்கோடியில் பகர வடிவில் அமைந்திருப்பன மாதிரிப் பள்ளிக் கட்டடங்கள். கல்லூரியில் தென்புறக் கட்டடத்தின்முன்னர் ஒரு தண்ணிர்க் குழாய்இருக்கின்றது: கல்லூரி மாணவர்கள் சிற்றுண்டி உண்டு நீர்ப் பருகுவதும் கை அலம்புவதும் இந்தக் குழாயில்தான். இங்ஙனமே மாதிரி உயர்நிலைப் பள்ளியின் வடபுறக் கட்டடத்தின் முன்னர் ஒரு தண்ணிர்க் குழாய் உண்டு. பள்ளி ஆசிரியர்கள் சிற்றுண்டி உண்டு கை அலம்புவதும் இந்தக் குழாயில்தான். சில சமயம் இடைநிலை ஆசிரியைக் கை அலம்புவதைக் குளத்து பார்க்க நேரிடும்; அதே சமயத்தில் குளத்து கை அலும்புவதை ஆசிரியையும் பார்க்கநேரிடும். இருவரும் கை அலம்பும்போது ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே கை அலம்புகையில் தம் கையை மறந்து ‘காதல் உணர்வில்’ ஆழங்கால் படும்போது குழாய் நீர் இருவர் பக்கத்திலும் கையில் படாது கீழே பாயும். ஒன்றிரண்டு நிமிடங்கள் கூட நீர் வீணாவது உண்டு. இக்காட்சிகளைக் கண்டு: களிக்கும் பி.டி. மாணவர்கள் பேரொலிகளை எழுப்பி மகிழ்வர். கல்லூரி ஆசிரியர்கள் இவ்வொலிகளைக் கேட்டு என்ன என்று பார்த்து மாணவர்களை வினவும்: போது குளத்துவின் கதையைச் சொல்லி மகிழ்வார்கள். அகத்துறையில் காதல் இன்பத்தைத் துய்ப்பதில் களவு, கற்பு என்ற இருவேறு நிலைகள் உள்ளன. முன்பின்