பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 36: நினைவுக் குமிழிகள்-3 அறியாத காதலர்களைச் சேர்த்து வைப்பது பால்வரைத் தெய்வம்’ என்று தொல்காப்பியர் கூறும் ஊழ் என்பது தமிழர்களின் கொள்கை. காதலர்கள் களவுக் காலத்தில் கொள்ளும் உடல் துடிப்பு கற்புக் காலத்தில் இருப்ப தில்லை. களவு வழிக் காதல் கங்கைப் பிரவாகம் போன்றது:கற்பு வழித் துய்க்கும் காதல் இன்பம் யமுனைப் .பிரவாகத்தையொக்கும் என்று சொல்லி வைக்கலாம். காதல் உணர்வு வேறு; காதல் சுவை வேறு. சுவை இலக்கணத்தை ஆழ்ந்து கற்போர் இவ்வேறுபாட்டை நன்கு அறிவர். குளத்தும் ஆசிரியையும் அநுபவிப்பது காதல், உணர்வு; குளத்துவின் தோழர்களாகிய பி டி. மாணாக்கர்கள் அநுபவிப்பது காதல் (உவகைச்) சுவை. குளத்து கல்லூரி வாழ்வில் களவு முறையிலேயே இன்பத்தை அதுபவித்தார், கல்லூரி வாழ்வு முடிந்ததும் இரு வழியிலும் உள்ள பெற்றோர்கள் தலையிட்டு இரு வரையும் கற்பு வழிப்படுத்தினர் என்ற செய்தியும் எப்படியோ கல்லூரிக்கும் எட்டியது. கலப்பு மனத்தினால் எழுந்த அலர், கூக்குரல், குற்றச்சாட்டு முதலியவை காதல் மணத்தினால் எழவில்லை. இருவரும் பிராமன வகுப்பைச் சேர்ந்தவர்களாதலால் முரண்பாடுகள் எழவே வாய்ப்பில்லை. - - பி. டி. வகுப்பில் மாணவிகளும் சேர்ந்து படிக்கும் காலத்தில் கலப்பு மணமோ காதல் மணமோ எழவில்லை. எல்லோரும் நன்கு கலந்துதான் பழகினர். இரசாபாசங்கள் ஏழாமல் காத்துக் கொண்டனர். பால்வரைத் தெய்வம்’ இவர்கட்குத் துணை நிற்கவில்லை போலும். ஆனால் அண்ணாமலைப் பல்கலைக் கழகவளாகத்தில் இத்தகைய திருமண நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் தவறாமல் நடை பெறும் என்று கேள்விப்பட்டதுண்டு. இத்தகைய திருமணங்கட்கு வைத்தீஸ்வரன் கோயிலிலுள்ள முருகனே சாட்சியாக இருப்பான் என்றும் பேசிக் கொள்வதும் என் காதில் விழுந்தது. پانصحيو ہسجبچ