பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுச் சிதறல்கள் 365 சா. க.விடம் நெருங்கிய தொடர்புஏற்பட்டபிறகு அவர் இல்லத்திற்கு எத்தனையோ அறிஞர்கள், அரசியல் தலை வர்கள், இலக்கியச் சுவைஞர்கள் முதலியோர் வந்துவந்து போவார்கள் . அவர்களிடம் எல்லாம் என்னை அறிமுகப் படுத்தி வைப்பார் கம்பன் அடிப்பொடி இப்படி அறிமுக மானவர்களை எல்லாம் இப்போது நினைவு கூர முடிய வில்லை. இப்படி அறிமுகமானவர்களில் முக்கியமானவர் ப. ஜீவாகந்தம். ஜீவா என்றே பொதுமக்களிடம் வழங்கப் படுவர். கம்பனைப் பொதுவுடைமைப் போக்கில் அற்புத மாகப் பேசுபவர். நாட்டுப் படலத்திலுள்ள சில பாடல் களை வைத்துக் கொண்டு பொதுவுடைமைக் கொள்கை களை விளக்கினது இன்னும் என் மனத்தில் பசுமையாகவே உள்ளது. தவிர, ஜீவா தம் முதுமைக் காலத்தில் நரம்புத் தளர்ச்சி நோயால் தாக்குண்டு மிகச் சிரமப்பட்டார். சா. க. ஆதரவில் காரைக்குடி-முத்துப்பட்டணத்தில்தங்கிப் பிள்ளையார் பட்டி வைத்தியரிடம் ஆயுர் வேத முறையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அடிக்கடி அவர் இல்லம் சென்று உடல் நலத்தைப் பற்றி விசாரித்து வருவதுண்டு. ஜீவா என் கல்லூரி வாழ்க்கையின் போதிருந்து என் வீர வழிபாட்டுக்குரியவர். அவர் தூத்துக்குடியிலிருந்து நடத்தி வந்த அன்பு என்ற வார(?) ஏட்டை ஈடுபாட்டுடன் படித்து வந்தவன். ஒரு சமயம் அவரை அவர் இல்லத்தில் சந்தித்தபோது திருச்சி தேசிய கல்லூரியில் (நான் அப்போது புனித சூசையப்பர் கல்லூரி யில்-இடை நிலை வகுப்பு மாணவன்) நீலாவதி அம்மை யாரின் தலைமையில் பேசியதை நினைவுகூர்ந்தேன். அப்போது பேராசிரியர் சாரநாதன் கல்லூரி முதல்வர்; அப்போது கல்லூரி தெப்பகுளம்-ஆண்டார் தெருவின் அருகிலிருந்தது. பேராசிரியர் சாரநாதன் வைதிக வைணவக் குடும்பத்தில் பிறந்தவராயினும், காந்தி நெறி யைப் பின்பற்றுபவராயினும் சாதி, சமய, அரசியல் கொள்கைகட்கு அப்பாற்பட்டவர்; விரிந்த மனமுடைய வர். இதனால்தான் ஜீவா பேச்சுக்குக் கல்லூரியில் இடம்.