பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆாரைக்குடி நண்பர்கள் 互 5 சாப்பிடுவது, நிற்க வேண்டிய இடத்தில் போய் நிற்பது, சில சமயம் பேருந்து போய்விடுவது-இவை எல்லாம் என் பழக்கத்திற்கும் இயல்பிற்கும் சரிப்பட்டு வரவில்லை. மிதிவண்டிதான் எனக்கு மிகவும் வசதியாக இருந்தது. காரைக்குடியில் வெயில் அதிகம். எனக்கு லக்னத்தில் சூரியன் ஆட்சி ; இதனாலோ என்னவோ இளமையி விருந்தே சூரிய வெப்பம் தாங்கிக்கொள்ள முடியாத நிலை. இதற்காக நல்ல தலையணி (Hat) வாங்கிக்கொண்டேன்; இஃது எனக்கு மிகவும் வசதியாக இருந்தது. காரைக்குடி யில் கல்லூரி வட்டத்தில் நான் ஒருவனே தொப்பி அணிட: வன்; திருப்பதியிலும் இதே நிலைதான். முதலில் சிலர் என்னை வேடிக்கையாக நோக்கினார்கள். நாளடைவில் இஃது எல்லோர் கண்ணுக்கும் பழக்கமாகிவிட்டது. காரைக்குடியில் இருக்கும்போது முதலில் கண்டு அறிமுகப்படுத்திக்கொள்ள ைேண்டியது இருவர்; ஒருவர் பெரும்புலவர் ராய. சொக்கலிங்கம். இவர் தேசபக்தர்; காந்தி அடியார் ; மற்றவர் சீர்திருத்தத்தொண்டர் சொ, முருகப்பர். இருவரும் 4 கல் தொலைவிலுள்ள தேவ கோட்டை சாலையிலுள்ள அமராவதிப் புதுாரில் வாழ்ப வர்கள். இருவரும் 1949 இல் கம்பன் விழாவில் அறிமுக மானவர்கள். புலவர்கள் பால் அன்பும் பாசமும் மிக்க வர்கள்! நான் காரைக்குடி அழகப்பர் ஆசிரியர் கல்லுரரியில் பணியேற்றதைத் தெரிவித்துக் கொள்ளவும் இனி அடிக்கடி சந்தித்துப் பழக வாய்ப்புகள் பெறவும் நினைந்து அவர் களைச் சந்திக்க நினைத்தேன். ஒரு சனிக்கிழமை மாலை ராய. சொ. அவர்களின் இல்லத்தை விசாரித்துக்கொண்டு அங்குச் சென்று வணக்கம் செலுத்தி உரையாடித் திரும்பி னேன். அடுத்த நாள் காலையில் மீண்டும் அமராவதிப் புதுரர்-மகளிர் இல்லம்-சென்று சொ. முருகப்பரைச் சந்தித்து உரையாடி மகிழ்ந்து திரும்பினேன். இவர்கள் நட்பு அவர்கள் திருநாடு அலங்கரிக்கும் வரையில் இருநிலம் பிளக்க வேர் வீழ்த்தது. இவர்கள் நட்பினால் எனக்குப் િ